Asianet News TamilAsianet News Tamil

சினிமாவை மிஞ்சும் வகையில் கார் - வேன் நேருக்கு நேர் மோதல்.. 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு..!

இந்த விபத்தில் புருஷோத்தமன், சக்திவேல், குருமூர்த்தி, வெங்கட் உள்ளிட்ட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தத ரகுவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Car Van head on collision.. 4 people died on the spot in Chengalpattu tvk
Author
First Published Sep 9, 2023, 9:00 AM IST

செங்கல்பட்டு அருகே  கார் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வழியாக மதுராந்தகம் நோக்கி 5 பேருடன் கார் வந்துக்கொண்டிருந்தது. அதே சாலையில் செய்யூரில் இருந்து உத்திரமேரூருக்கு தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேனும் வந்துக்கொண்டிருந்த போது ஓனம்பாக்கத்தில் எதிர்பாராத விதமாக காரும் வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில், கார் தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது.

இதையும் படிங்க;- 6 முறை கருக்கலைப்பு செய்தது உண்மையா? நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்.. இன்று நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்..!

Car Van head on collision.. 4 people died on the spot in Chengalpattu tvk

இந்த விபத்தில் புருஷோத்தமன், சக்திவேல், குருமூர்த்தி, வெங்கட் உள்ளிட்ட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தத ரகுவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;-  நெஞ்சு வலியோடு நடக்க முடியாமல் தட்டு தடுமாறி ஆஸ்பிடலுக்கு காரை ஓட்டி சென்ற மாரிமுத்து!கலங்க வைக்கும் காட்சிகள்

Car Van head on collision.. 4 people died on the spot in Chengalpattu tvk

மேலும், உயிரிழந்த 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios