நெஞ்சு வலியோடு நடக்க முடியாமல் தட்டு தடுமாறி ஆஸ்பிடலுக்கு காரை ஓட்டி சென்ற மாரிமுத்து!கலங்க வைக்கும் காட்சிகள்
நெஞ்சு வலி காரணமாக டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து தள்ளாடிய படி மருத்துவமனைக்கு மாரிமுத்து கார் ஓட்டி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சு வலி காரணமாக டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து தள்ளாடிய படி மருத்துவமனைக்கு மாரிமுத்து கார் ஓட்டி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால், எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியலால் உச்சத்திற்கு சென்றார். சினிமாவில் மாரிமுத்துவிற்கு கிடைத்த புகழை ஒரே ஒரு சீரியல் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்களையும் புகழ், செல்வாக்கை கிடைக்கச் செய்தது. கடந்த ஓராண்டில் ஆதி குணசேகரன் பற்றி சோசியல் மீடியாக்களில் போடப்படாத் மீம்ஸே இல்லை என சொல்லும் அளவுக்கு மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் கொடுத்து வந்தார் மாரிமுத்து.
இதையும் படிங்க;- “அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடக்க முடியாமல் தடுமாறிய நிலையில் வலியையும் பொருட்படுத்தாமல் தானே காரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவில் யாரிடமோ செல்போனில் பேசியபடி வெளியே வந்த மாரிமுத்து பின்னர் காரில் ஏறி இன்டிகேட்டரை போட்டு பதற்றமில்லாமல் காரை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க;- நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்.. டப்பிங் பேசும் போது என்ன நடந்தது? நடிகர் கமலேஷ் சொன்ன தகவல்..
பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்தது.
பின்னர், மருத்துவமனையில் இருந்து மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தமிழ் திரையுலகினர் மற்றும் எதிர்நீச்சல் சீரியல் குடும்பத்தினர் கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு பொது மக்களும், உறவினர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.