Tamil News Live Updates: சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்!!

Breaking Tamil News Live Updates on 04 december 2023

Chennai Rains: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே சென்னை விமான நிலையம் இன்று இரவு வரை மூடப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாளை காலை ஒன்பது மணி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:05 AM IST

மிக்ஜாம்: போர்க்கால அடிப்படையில் மீட்பு & நிவாரணப் பணிகள்.. ஓரணியாய் திரள்வோம்.. முதலமைச்சர் அழைப்பு.!!

மிக்ஜாம் புயல் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதனுடன் கரம் கோர்ப்போம் என்று முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

11:32 PM IST

ரொம்ப கேவலமா இருக்கு மேயர் பிரியா.. எம்எல்ஏ காணோம்.. வரி என்னாச்சு.! கடுப்பான நடிகர் விஷால்..

பொதுமக்கள் சேவை செய்வது இருக்கட்டும், சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்கள் என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

10:54 PM IST

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்.? இதற்கு மேல் போனால்.. இப்படியொரு விதி இருக்கா..

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ரிசர்வ் வங்கியின் புதிய விதியை தெரிந்து கொள்ளுங்கள்.

10:26 PM IST

கனமழை எதிரொலி : வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

மழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

9:17 PM IST

இன்னைக்கு நைட் ரொம்ப கவனமாக இருங்க.. சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வேதர் மேன் பிரதீப் ஜான் அலெர்ட்..

மிக்ஜாம் புயல் சென்னையை உலுக்கி வரும் இந்த சூழலில், தமிழ்நாடு வேதர் மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

8:04 PM IST

பாகிஸ்தானில் இந்து கோவிலை விலங்கு பண்ணையாக மாற்றிய அவலம்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள் - வைரல் வீடியோ

பாகிஸ்தானின் சாதிகாபாத்தில் உள்ள மற்றொரு கோவிலையும் விலங்கு பண்ணையாக மாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8:01 PM IST

பெருங்குடியில் 50 செ.மீ. மழை!!

சென்னை, பெருங்குடியில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

7:50 PM IST

சென்னை கனமழையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பகுதிகளில் சேதம் அதிகம்? மாநகர காவல்துறை அறிக்கை

சென்னை அதிகனமழை வெள்ளத்தால் இதுவரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று மாநகர காவல்துறை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

7:39 PM IST

நிவாரண மையங்களுக்கு உணவு!!

சென்னை அம்பேத்கர் தெருவில் இருக்கும் கம்யூனிட்டி சென்டரில் 20 இடங்களில் உணவுகள் சமைக்கப்பட்டு, 120  நிவாரண மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

7:32 PM IST

7 மாவட்டங்களில் 10 மணிவரை மழை நீடிக்கும்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

6:56 PM IST

இவ்வளவு பணத்துக்கு மேல் வீட்டில் வைத்திருக்க கூடாது.. மீறினால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

நீங்கள் அதிகபட்சமாக இவ்வளவு பணத்தை வீட்டில் வைத்திருக்கலாம். இதற்கு மேல் வைத்திருக்க கூடாது. இது தொடர்பான வருமான வரி விதிகளை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

6:40 PM IST

ஆந்திரா நோக்கி நகரும் மிக்ஜாம் புயல்!!

புயல் சென்னையை கடந்து 110 கிமீ தொலைவில் ஆந்திரா நோக்கி செல்லத் துவங்கியுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6:36 PM IST

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம்!!

6:09 PM IST

சென்னை மழைக்கு இறந்தவர்களின் விவரம்!!

5:54 PM IST

இன்னும் 3-4 மணி நேரத்துக்கு சென்னையில் கனமழை இருக்கும்!!

5:47 PM IST

மிசோரம் சட்டசபை தேர்தலில் தோல்வி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜோரம்தங்கா..!

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா, கட்சியின் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

5:41 PM IST

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி 4 மணி நிலவரம்: ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,209-ஆக அதிகரித்துள்ளது. ஏரியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

5:35 PM IST

1 நிமிடத்தில் பேட்டரி ஃபுல்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 55 ஆயிரம் மட்டும் தானா..

யூலு வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டில் தொடர்ந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இதன் விலை மிகவும் குறைவு ஆகும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

5:22 PM IST

ராயப்பேட்டை ஜி.பி.சாலையில் அமைச்சர் உதயநிதி!!

5:19 PM IST

Michaung update: பொன்னேரி-ஸ்ரீஹரிகோட்டாவில் புயல் மையம்!!

Michaung update - தற்போது பொன்னேரி-ஸ்ரீஹரிகோட்டா பெல்ட் புயல் மையம் கொண்டுள்ளது. புயலுக்கு தெற்கிலும் மேற்கிலும் பெரிய மேகங்கள் உருவாகியுள்ளன. சென்னையில் (கேடிசிசி) நள்ளிரவு வரை மழை நீடிக்கும். புயல் அருகில் இருக்கும் வரை மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

5:09 PM IST

மழை பாதிப்பு உதவிக்கு வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் புகார் கூறவும் உதவி பெறவும் 94454 77205 என வாட்ஸ்ஆப் எண் மூலமும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5:01 PM IST

பள்ளிகரணை பூர்வா விண்டர்மெட்டில் வெள்ளம்!!

சென்னை, பள்ளிகரணை பூர்வா விண்டர்மெட் அபார்ட்மெண்ட்டுக்குள் வெள்ளம் செல்லும் அதிர்ச்சி காட்சி.

4:59 PM IST

தேர்வுகள் ஒத்திவைப்பு

டிசம்பர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் தேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இரண்டு பல்கலைக்கழகங்களும் மீண்டும் தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளன.

4:50 PM IST

பெருங்குடியில் வெளுத்து வாங்கும் மழை!!

4:42 PM IST

மிக்ஜாம் புயல்: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா!

மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்துள்ளார்

4:39 PM IST

மழை பாதிப்பு - புகார் கொடுக்க புதிய எண்கள் அறிவிப்பு

மழை பாதிப்புகள் குறித்த புகார்களுக்காக சென்னை மாநகராட்சி புதிய எண்களை அறிவித்துள்ளது. 1913 என்ற எண் வேலை செய்யவில்லை என்று பல புகார்கள் வந்ததை அடுத்து மாநகராட்சி மாற்று எண்களை அறிவித்துள்ளது.

044-25619206

044-25619207

044-25619208

ஆகிய மூன்று எண்களில் தொடர்புகொண்டு மழை பாதிப்பு குறித்த புகார்களை அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

4:30 PM IST

ராஜஸ்தானின் அடுத்த பாஜக முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் 7 பேர்!

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான ரேஸில் பாஜகவை  சேர்ந்த 7 பேர் உள்ளனர்

4:23 PM IST

மீட்புப் பணியில் இந்திய ராணுவம்!!

இந்திய ராணுவம் வெள்ளத்தில் சிக்கிய 300 பேரை காப்பாற்றியது.

4:19 PM IST

சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி!!

சென்னை, சத்தியபாமா இன்ஸ்டிடியூட் ஆப் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

4:09 PM IST

மடிப்பாக்கம், மகாலட்சுமி நகரில் வெள்ளம்!!

சென்னை மடிப்பாக்கம், மகாலட்சுமி நகரில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

4:00 PM IST

பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இருந்து 33 விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், எதியாட், லுப்தான்ஸா, வளைகுடா நாடுகள் மற்றும் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன. 
இன்று இரவு 11 மணி வரை சென்னை விமான நிலையத்துக்கு வரும் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

3:32 PM IST

வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த ரோபோ சங்கர்... காலில் ரத்த காயத்துடன் வெளியிட்ட வீடியோ இதோ

நடிகர் ரோபோ சங்கர் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்ததாக காலில் ரத்தத்துடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

3:28 PM IST

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்: ராகவ் சத்தாவுக்கு அனுமதி; மஹுவா மொய்த்ரா ரிப்போர்ட்?

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவில்லை

2:55 PM IST

2015 வெள்ளத்தைவிட பெரும்பாதிப்பை ஏற்படுத்தியதா மிக்ஜாம் புயல்...? வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி எடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

2:48 PM IST

வேறு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில் விவரங்கள்!!

Cyclone Michaung News: MGR சென்னை சென்ட்ரலுக்குப் பதிலாக மற்ற ரயில் நிலையங்களில் புறப்படும் ரயில் விவரங்கள்:

- ரயில் எண். 12695 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் ஆவடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்.

- ரயில் எண். 12685 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரலில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

- ரயில் எண். 16089 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ், மாலை 5.55 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்  அரக்கோணத்தில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும்.

2:40 PM IST

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து ரத்தான ரயில்கள் விவரம்!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்:

1. ரயில் எண். 12671 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று 21.05 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

2. ரயில் எண். 12673 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சேரன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 22.00 மணிக்குப் புறப்படும்.

3. ரயில் எண். 20601 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 22.30 மணிக்குப் புறப்படும்.

4. ரயில் எண். 22639 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று 20.55 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

5. ரயில் எண். 16021 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று 21.15 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

6. ரயில் எண். 17651 செங்கல்பட்டு - கச்சேகுடா எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று 15.35 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

7. ரயில் எண். 12623 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் மெயில், டிசம்பர் 04, 2023 அன்று 19.45 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

8. ரயில் எண். 12657 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் டிசம்பர் 04, 2023 அன்று மதியம் 22.50 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

9. ரயில் எண். 22649 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 23.00 மணிக்கு புறப்படும்.

10. ரயில் எண். 22651 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் டிசம்பர் 04, 2023 அன்று மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

2:16 PM IST

மிசோரமில் ஆட்சியமைக்கும் ஜோரம் மக்கள் இயக்கம்!

மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

2:03 PM IST

மிக்ஜாம் புயலின் அடுத்த டார்கெட் திருவள்ளூர்... அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்

மிக்ஜாம் புயல் படிப்படியாக ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் கொடுத்துள்ளது.

1:48 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு

ஆவடி - 28 செ.மீ. 
சோழவரம் - 20 செ.மீ
பொன்னேரி -19 செ.மீ
செங்குன்றம் - 17 செ.மீ
தாமரைப்பக்கம் - 17 செ.மீ
கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ
ஊத்துக்கோட்டை - 15 செ.மீ
திருவள்ளூர் - 15 செ.மீ
பூந்தமல்லி - 14 செ.மீ
ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ
திருத்தணி - 12 செ.மீ
பூண்டி - 12 செ.மீ
திருவாலங்காடு - 10 செ.மீ
பள்ளிப்பட்டு - 6 செ.மீ
ஆர்கே பேட்டை - 4 செ.மீ.

1:09 PM IST

சென்னையில் 47 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை: களத்தில் இறங்கும் திமுக ஐடி விங்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து வரும் நிலையில், களத்தில் இறங்க திமுக ஐடி விங்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

1:01 PM IST

ரூட்டை மாற்றிய மிக்ஜாம் புயல்... சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை ஆர்வலர்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கிய நிலையில், அது எப்போது குறையும் என்கிற அப்டேட்டை வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

12:27 PM IST

ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு வழித்தடம் அறிவிப்பு!!

ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு வழித்தடத்தை சென்னை கார்பரேஷன் அறிவித்துள்ளது.

12:20 PM IST

Anna University Exams : கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!

Anna University : கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

12:12 PM IST

வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி... பார்க்கிங் ஏரியாவாக மாறிய பாலம் - படையெடுத்து நிற்கும் கார்கள்

வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் அதிலிருந்து கார்களை பாதுகாத்துக்கொள்ள அங்குள்ள பாலத்தில் மக்கள் வரிசையாக பார்க்கிங் செய்துள்ளனர்.

12:12 PM IST

சென்னையில் குறையும் மழை!!

சென்னையின் மையப் பகுதியில் மழைப்பொழிவு வலுவிழந்து வருகிறது. மழை படிப்படியாக குறையும். புறநகர் பகுதிகளில் மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கு முன்பு குறையும். புயல் நமது கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சில நேரங்களில் காற்று வீசும் என்று சென்னை வெதர் ராஜா ராமசாமி பதிவிட்டுள்ளார்.

12:05 PM IST

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு இன்று மதியம் 12.30 முதல் வினாடிக்கு 3000 கன அடியில் இருந்து 6000 கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது. 10 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படக்கூடும்.
எனவே அடையாறு ஆற்றின் கரையோரமாக உள்ளோர் கவனமாக இருக்க வேண்டும்.

11:58 AM IST

2024இல் மோடி வென்றால் அது ராகு காலம்: காயத்திரி ரகுராம் சாடல்!

2024இல் மோடி வென்றால் அது ராகு காலம் என காயத்திரி ரகுராம் சாடியுள்ளார்

11:24 AM IST

முதலையால் பாதிப்பு இல்லை: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தகவல்!

பெருங்களத்தூர் அருகே தென்பட்ட முதலையால் பாதிப்பு இல்லை என வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்

11:20 AM IST

மோசமான நிலைமை... விவரிக்க வார்த்தைகள் இல்லை! சென்னையில் அடுத்து நடக்கப்போவது என்ன? அதிர்ச்சி கொடுத்த வெதர்மேன்

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி எடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை வானிலை குறித்து ஷாக்கிங் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

11:14 AM IST

சென்னையில் இன்று இரவு வரை மழை வெளுக்கும்!!

இன்று இரவு வரை மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வேதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

No words to explain the carnage, the cyclone outer edge is grazing the Chennai coast. West clouds remains adamant and is remaining over Chennai. The slow movement will dump huge amount of rains over chennai till today evening / night. pic.twitter.com/EImOtPJ5cD

11:06 AM IST

கூடுவாஞ்சேரியில் படகு மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்கள் மீட்பு!!

கூடுவாஞ்சேரியில் படகு மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

10:41 AM IST

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரயில்கள்!!

சென்னையில் உள்ள அனைத்து மின்சார ரயில் வழித்தடங்களிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

10:38 AM IST

வெள்ளத்தில் சிக்கி இருக்கும் தாம்பரம் அரசு மருத்துவமனை!!

சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. 

10:28 AM IST

சென்னையின் பல இடங்களில் கன மழை!!

சென்னையின் பல இடங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான கன மழை பெய்து இருக்கிறது.

10:24 AM IST

தத்தளிக்கும் சென்னை விமான நிலையம்!!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்டு இருக்கும் மழை வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் சென்னை விமான நிலையம். 

10:20 AM IST

வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை!!

வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை.

10:07 AM IST

கனமழையால் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்; தத்தளிக்கும் நோயாளிகள்!!

கனமழை காரணமாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்குள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

9:57 AM IST

வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் வடக்குப்பட்டு பூர்வாங்காரா அடுக்குமாடி!!

வடக்குப்பட்டுவில் இருக்கும் பூர்வாங்காரா அடுக்குமாடி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

9:51 AM IST

வேளச்சேரியில் உருவான பள்ளம்!!

வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே திடீரென 40 அடிக்கு ஏற்பட்ட பள்ளத்ததால் பரபரப்பு. பெட்ரோல் நிலைய மேற்கூரையும் சரிந்து விழுந்ததில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

9:46 AM IST

சென்னை கீழ்க்கட்டளை, காந்திநகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!!

சென்னை கீழ்க்கட்டளை, காந்திநகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். இந்தப்  பதிவை நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

9:39 AM IST

சென்னை மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெரு!!

மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவில், கீழ்பகுதியிலுள்ள வீடு, இன்னும் சில மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கும் என்று தெரிகிறது. மழைநீர் வடிய வழியில்லை. பக்கத்து தெருவான விவேகானந்தா கல்லூரி அமைந்துள்ள தெருவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு நிரம்பிய நீர் வெளியேற வழியின்றி, இல்லை.. அடுத்து என்ன நடக்ம் என்று தெரியவில்லை என்று தேவராஜ் என்பவர் தனது வீட்டின் நிலையை வீடியோ எடுத்து இருக்கிறார்.

9:23 AM IST

வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!!

எக்மோர் ரயில்வே நிலையத்தில் இருக்கும் தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கி, தண்டவாளம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.

9:20 AM IST

தீவிரமடையும் மிக்ஜாம் புயல்... சென்னையில் நாளையும் அரசு விடுமுறையா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னையில் மிக்ஜாம் புயலின் கோரதாண்டவத்தால் கனமழை கொட்டி வரும் நிலையில், நாளை சென்னையில் அரசு விடுமுறை விடப்படுமா என்பது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

9:19 AM IST

IMD அதிகாரி பாலச்சந்திரன் பேட்டி!!

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

9:13 AM IST

சூப்பர் சூறாவளியாக மாறும் மிக்ஜாம் புயல்!!

மிக்ஜாம் புயல் டிசம்பர் 4 ஆம் தேதி, இன்று காலை 05.30 மணிக்கு தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய, அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிரமடைந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே பாபட்லாவுக்கு அருகில் டிசம்பர் 5 ஆம் தேதி சூப்பர் சூறாவளி புயலாக கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9:06 AM IST

மிக்ஜாம் புயல் நிலவரம்!!

சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று முற்பகல் தீவிர புயலாக மாறும். நாளை மாலை நெல்லூர் - மசூலிப்பட்டினத்தில் நாளை முற்பகல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

9:03 AM IST

சென்னையில் தரை இறங்கிய அடுக்குமாடி கட்டடம்!!

சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக தரையில் இறங்கிது. கட்டடத்திற்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8:54 AM IST

மிரட்டும் கனமழை - சென்னையில் 20 விமானங்கள் ரத்து

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

8:50 AM IST

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை!!

சென்னை வெள்ளக்காடு போன்று காட்சியளிக்கிறது.

8:43 AM IST

வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் பாரிய மரம் வேரோடு சாய்ந்தது!!

.

வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் பாரிய மரம் வேரோடு சாய்ந்தது

8:30 AM IST

தியாகராய நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதை மூடல்!!

சென்னையில் தியாகராய நகரில் இருக்கும் அரங்கநாதன் சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

8:30 AM IST

சென்னையில் அதிகபட்ச மழைப்பதிவு எங்கே? முழு விவரம் இதோ

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து கனமழை கொட்டி வரும் நிலையில், பெருங்குடியில் 24 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

8:27 AM IST

சென்னையில் கனமழை.. 14 சுரங்கபாதைகள் மூடல்.. மின்சார ரயில் சேவையில் சிக்கல்? சுகாதார அதிகாரி விடுத்த கோரிக்கை!

Chennai Rain Live Updates : சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே சில போக்குவரத்துக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

8:22 AM IST

பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை!!

சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8:20 AM IST

சென்னையில் இருந்து ரயில்கள் ரத்து விவரம்!!

சென்னையில் கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மிக்ஜான் புயலின் வேகம் இன்னும் கடுமையாக இருக்கும் என்பதால், மக்கள் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றனர். பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

8:15 AM IST

கோடம்பாக்கம் ஆசிஸ் நகர் மெயின் ரோடு வெள்ளத்தில் மிதக்கிறது!!

கோடம்பாக்கம் ஆசிஸ் நகர் மெயின் ரோடு வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையின் பெரும்பாலான இடங்கள் இதுபோன்றுதான் காட்சியளிக்கிறது. 

7:52 AM IST

Chennai Rains: சென்னையில் அடுத்த 8 மணி நேரத்திற்கு கன மழை!!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரத்தில் கன  மழை இருக்கும். இன்று இரவு வரை சென்னையில் கன மழை இருக்கும். சென்னையில் எட்டு மணி நேரத்திற்கு மழை தொடரும். அவ்வப்போது பலத்த காற்று இருக்கும். இன்று மாலை நான்கு மணி வரை சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

7:45 AM IST

சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல்!!

சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

7:42 AM IST

மிக்ஜாம் புயல் நிலவரம் என்ன? சென்னைக்கு ஆபத்து?

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து சுமார் 125 கிமீ தொலைவில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரங்களில் மெதுவாக நகர்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மகாபலிபுரம் மற்றும் காவாலி இடையே மிக கனமழை பெய்து கரையோரம் மெதுவாக நகரும். வட தமிழகத்தில் பகலில் முதல் பாதியில் கனமழை இருக்கும். அதே வேளையில், படிப்படியாக கடலோர ஆந்திரப் பகுதியில் 2வது பாதியில் கனமழை அதிகரிக்கும். காலை நேரங்களில் பலத்த காற்று வீசும். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை ரெயின்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

12:05 AM IST:

மிக்ஜாம் புயல் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதனுடன் கரம் கோர்ப்போம் என்று முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

11:32 PM IST:

பொதுமக்கள் சேவை செய்வது இருக்கட்டும், சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்கள் என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

10:54 PM IST:

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ரிசர்வ் வங்கியின் புதிய விதியை தெரிந்து கொள்ளுங்கள்.

10:26 PM IST:

மழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

9:17 PM IST:

மிக்ஜாம் புயல் சென்னையை உலுக்கி வரும் இந்த சூழலில், தமிழ்நாடு வேதர் மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

8:04 PM IST:

பாகிஸ்தானின் சாதிகாபாத்தில் உள்ள மற்றொரு கோவிலையும் விலங்கு பண்ணையாக மாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8:01 PM IST:

சென்னை, பெருங்குடியில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

8:01 PM IST:

சென்னை, பெருங்குடியில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

7:50 PM IST:

சென்னை அதிகனமழை வெள்ளத்தால் இதுவரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று மாநகர காவல்துறை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

7:39 PM IST:

சென்னை அம்பேத்கர் தெருவில் இருக்கும் கம்யூனிட்டி சென்டரில் 20 இடங்களில் உணவுகள் சமைக்கப்பட்டு, 120  நிவாரண மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

7:32 PM IST:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

6:56 PM IST:

நீங்கள் அதிகபட்சமாக இவ்வளவு பணத்தை வீட்டில் வைத்திருக்கலாம். இதற்கு மேல் வைத்திருக்க கூடாது. இது தொடர்பான வருமான வரி விதிகளை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

6:40 PM IST:

புயல் சென்னையை கடந்து 110 கிமீ தொலைவில் ஆந்திரா நோக்கி செல்லத் துவங்கியுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6:36 PM IST:

6:09 PM IST:

5:54 PM IST:

5:47 PM IST:

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா, கட்சியின் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

5:41 PM IST:

செம்பரம்பாக்கம் ஏரி 4 மணி நிலவரம்: ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,209-ஆக அதிகரித்துள்ளது. ஏரியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

5:35 PM IST:

யூலு வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டில் தொடர்ந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இதன் விலை மிகவும் குறைவு ஆகும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

5:22 PM IST:

5:19 PM IST:

Michaung update - தற்போது பொன்னேரி-ஸ்ரீஹரிகோட்டா பெல்ட் புயல் மையம் கொண்டுள்ளது. புயலுக்கு தெற்கிலும் மேற்கிலும் பெரிய மேகங்கள் உருவாகியுள்ளன. சென்னையில் (கேடிசிசி) நள்ளிரவு வரை மழை நீடிக்கும். புயல் அருகில் இருக்கும் வரை மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

5:09 PM IST:

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் புகார் கூறவும் உதவி பெறவும் 94454 77205 என வாட்ஸ்ஆப் எண் மூலமும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5:01 PM IST:

சென்னை, பள்ளிகரணை பூர்வா விண்டர்மெட் அபார்ட்மெண்ட்டுக்குள் வெள்ளம் செல்லும் அதிர்ச்சி காட்சி.

5:00 PM IST:

டிசம்பர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் தேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இரண்டு பல்கலைக்கழகங்களும் மீண்டும் தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளன.

4:50 PM IST:

4:42 PM IST:

மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்துள்ளார்

4:39 PM IST:

மழை பாதிப்புகள் குறித்த புகார்களுக்காக சென்னை மாநகராட்சி புதிய எண்களை அறிவித்துள்ளது. 1913 என்ற எண் வேலை செய்யவில்லை என்று பல புகார்கள் வந்ததை அடுத்து மாநகராட்சி மாற்று எண்களை அறிவித்துள்ளது.

044-25619206

044-25619207

044-25619208

ஆகிய மூன்று எண்களில் தொடர்புகொண்டு மழை பாதிப்பு குறித்த புகார்களை அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

4:30 PM IST:

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான ரேஸில் பாஜகவை  சேர்ந்த 7 பேர் உள்ளனர்

4:23 PM IST:

இந்திய ராணுவம் வெள்ளத்தில் சிக்கிய 300 பேரை காப்பாற்றியது.

4:19 PM IST:

சென்னை, சத்தியபாமா இன்ஸ்டிடியூட் ஆப் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

4:09 PM IST:

சென்னை மடிப்பாக்கம், மகாலட்சுமி நகரில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

4:00 PM IST:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இருந்து 33 விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், எதியாட், லுப்தான்ஸா, வளைகுடா நாடுகள் மற்றும் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன. 
இன்று இரவு 11 மணி வரை சென்னை விமான நிலையத்துக்கு வரும் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

3:32 PM IST:

நடிகர் ரோபோ சங்கர் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்ததாக காலில் ரத்தத்துடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

3:28 PM IST:

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவில்லை

2:55 PM IST:

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி எடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

2:48 PM IST:

Cyclone Michaung News: MGR சென்னை சென்ட்ரலுக்குப் பதிலாக மற்ற ரயில் நிலையங்களில் புறப்படும் ரயில் விவரங்கள்:

- ரயில் எண். 12695 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் ஆவடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்.

- ரயில் எண். 12685 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரலில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

- ரயில் எண். 16089 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ், மாலை 5.55 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்  அரக்கோணத்தில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும்.

2:40 PM IST:

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்:

1. ரயில் எண். 12671 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று 21.05 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

2. ரயில் எண். 12673 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சேரன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 22.00 மணிக்குப் புறப்படும்.

3. ரயில் எண். 20601 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 22.30 மணிக்குப் புறப்படும்.

4. ரயில் எண். 22639 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று 20.55 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

5. ரயில் எண். 16021 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று 21.15 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

6. ரயில் எண். 17651 செங்கல்பட்டு - கச்சேகுடா எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று 15.35 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

7. ரயில் எண். 12623 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் மெயில், டிசம்பர் 04, 2023 அன்று 19.45 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

8. ரயில் எண். 12657 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் டிசம்பர் 04, 2023 அன்று மதியம் 22.50 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

9. ரயில் எண். 22649 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் 04 டிசம்பர் 2023 அன்று டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 23.00 மணிக்கு புறப்படும்.

10. ரயில் எண். 22651 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் டிசம்பர் 04, 2023 அன்று மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

2:16 PM IST:

மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

2:03 PM IST:

மிக்ஜாம் புயல் படிப்படியாக ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் கொடுத்துள்ளது.

1:48 PM IST:

ஆவடி - 28 செ.மீ. 
சோழவரம் - 20 செ.மீ
பொன்னேரி -19 செ.மீ
செங்குன்றம் - 17 செ.மீ
தாமரைப்பக்கம் - 17 செ.மீ
கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ
ஊத்துக்கோட்டை - 15 செ.மீ
திருவள்ளூர் - 15 செ.மீ
பூந்தமல்லி - 14 செ.மீ
ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ
திருத்தணி - 12 செ.மீ
பூண்டி - 12 செ.மீ
திருவாலங்காடு - 10 செ.மீ
பள்ளிப்பட்டு - 6 செ.மீ
ஆர்கே பேட்டை - 4 செ.மீ.

1:09 PM IST:

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து வரும் நிலையில், களத்தில் இறங்க திமுக ஐடி விங்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

1:01 PM IST:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கிய நிலையில், அது எப்போது குறையும் என்கிற அப்டேட்டை வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

12:27 PM IST:

ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு வழித்தடத்தை சென்னை கார்பரேஷன் அறிவித்துள்ளது.

12:20 PM IST:

Anna University : கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

12:12 PM IST:

வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் அதிலிருந்து கார்களை பாதுகாத்துக்கொள்ள அங்குள்ள பாலத்தில் மக்கள் வரிசையாக பார்க்கிங் செய்துள்ளனர்.

12:12 PM IST:

சென்னையின் மையப் பகுதியில் மழைப்பொழிவு வலுவிழந்து வருகிறது. மழை படிப்படியாக குறையும். புறநகர் பகுதிகளில் மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கு முன்பு குறையும். புயல் நமது கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சில நேரங்களில் காற்று வீசும் என்று சென்னை வெதர் ராஜா ராமசாமி பதிவிட்டுள்ளார்.

12:05 PM IST:

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு இன்று மதியம் 12.30 முதல் வினாடிக்கு 3000 கன அடியில் இருந்து 6000 கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது. 10 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படக்கூடும்.
எனவே அடையாறு ஆற்றின் கரையோரமாக உள்ளோர் கவனமாக இருக்க வேண்டும்.

11:58 AM IST:

2024இல் மோடி வென்றால் அது ராகு காலம் என காயத்திரி ரகுராம் சாடியுள்ளார்

11:24 AM IST:

பெருங்களத்தூர் அருகே தென்பட்ட முதலையால் பாதிப்பு இல்லை என வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்

11:20 AM IST:

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி எடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை வானிலை குறித்து ஷாக்கிங் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

11:14 AM IST:

இன்று இரவு வரை மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வேதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

No words to explain the carnage, the cyclone outer edge is grazing the Chennai coast. West clouds remains adamant and is remaining over Chennai. The slow movement will dump huge amount of rains over chennai till today evening / night. pic.twitter.com/EImOtPJ5cD

11:06 AM IST:

கூடுவாஞ்சேரியில் படகு மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

10:41 AM IST:

சென்னையில் உள்ள அனைத்து மின்சார ரயில் வழித்தடங்களிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

10:38 AM IST:

சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. 

10:28 AM IST:

சென்னையின் பல இடங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான கன மழை பெய்து இருக்கிறது.

10:24 AM IST:

மிக்ஜாம் புயலால் ஏற்பட்டு இருக்கும் மழை வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் சென்னை விமான நிலையம். 

10:20 AM IST:

வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை.

10:07 AM IST:

கனமழை காரணமாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்குள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

9:56 AM IST:

வடக்குப்பட்டுவில் இருக்கும் பூர்வாங்காரா அடுக்குமாடி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

9:51 AM IST:

வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே திடீரென 40 அடிக்கு ஏற்பட்ட பள்ளத்ததால் பரபரப்பு. பெட்ரோல் நிலைய மேற்கூரையும் சரிந்து விழுந்ததில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

9:46 AM IST:

சென்னை கீழ்க்கட்டளை, காந்திநகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். இந்தப்  பதிவை நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

9:39 AM IST:

மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவில், கீழ்பகுதியிலுள்ள வீடு, இன்னும் சில மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கும் என்று தெரிகிறது. மழைநீர் வடிய வழியில்லை. பக்கத்து தெருவான விவேகானந்தா கல்லூரி அமைந்துள்ள தெருவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு நிரம்பிய நீர் வெளியேற வழியின்றி, இல்லை.. அடுத்து என்ன நடக்ம் என்று தெரியவில்லை என்று தேவராஜ் என்பவர் தனது வீட்டின் நிலையை வீடியோ எடுத்து இருக்கிறார்.

9:23 AM IST:

எக்மோர் ரயில்வே நிலையத்தில் இருக்கும் தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கி, தண்டவாளம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.

9:20 AM IST:

சென்னையில் மிக்ஜாம் புயலின் கோரதாண்டவத்தால் கனமழை கொட்டி வரும் நிலையில், நாளை சென்னையில் அரசு விடுமுறை விடப்படுமா என்பது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

9:19 AM IST:

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

9:13 AM IST:

மிக்ஜாம் புயல் டிசம்பர் 4 ஆம் தேதி, இன்று காலை 05.30 மணிக்கு தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய, அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிரமடைந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே பாபட்லாவுக்கு அருகில் டிசம்பர் 5 ஆம் தேதி சூப்பர் சூறாவளி புயலாக கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9:05 AM IST:

சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று முற்பகல் தீவிர புயலாக மாறும். நாளை மாலை நெல்லூர் - மசூலிப்பட்டினத்தில் நாளை முற்பகல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

9:03 AM IST:

சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக தரையில் இறங்கிது. கட்டடத்திற்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8:54 AM IST:

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

8:50 AM IST:

சென்னை வெள்ளக்காடு போன்று காட்சியளிக்கிறது.

8:43 AM IST:

.

வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் பாரிய மரம் வேரோடு சாய்ந்தது

8:30 AM IST:

சென்னையில் தியாகராய நகரில் இருக்கும் அரங்கநாதன் சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

8:30 AM IST:

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து கனமழை கொட்டி வரும் நிலையில், பெருங்குடியில் 24 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

8:27 AM IST:

Chennai Rain Live Updates : சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே சில போக்குவரத்துக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

8:22 AM IST:

சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8:20 AM IST:

சென்னையில் கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மிக்ஜான் புயலின் வேகம் இன்னும் கடுமையாக இருக்கும் என்பதால், மக்கள் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றனர். பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

8:15 AM IST:

கோடம்பாக்கம் ஆசிஸ் நகர் மெயின் ரோடு வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையின் பெரும்பாலான இடங்கள் இதுபோன்றுதான் காட்சியளிக்கிறது. 

7:52 AM IST:

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரத்தில் கன  மழை இருக்கும். இன்று இரவு வரை சென்னையில் கன மழை இருக்கும். சென்னையில் எட்டு மணி நேரத்திற்கு மழை தொடரும். அவ்வப்போது பலத்த காற்று இருக்கும். இன்று மாலை நான்கு மணி வரை சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

7:45 AM IST:

சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

7:42 AM IST: