பொதுமக்கள் சேவை செய்வது இருக்கட்டும், சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்கள் என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேசுகையில், “சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புயல் மேற்கு நோக்கி நகர்ந்துவிட்டது. தற்போது பழவேற்காடு அருகே உள்ள கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. மேலும் நகர்ந்து நெல்லூர் அருகே நாளை கரையைக் கடக்கிறது.
இருப்பினும் மேற்கு மற்றும் தென் பகுதியில் அடர்ந்த மழை மேகங்கள் காணப்படுகின்றன. இதனால், இன்று நள்ளிரவு வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 8. 30 மணி அளவில் செம்பரம்பாக்கத்தில் 16. 2 செ. மீ. , ஆவடியில் 28 செ. மீட்டர் மழையும் பதிவானது. நகரப்பகுதிகளில் 20 செ. மீட்டர் மழை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் காலை முறையே 23, 25 செ. மீட்டர் மழை பதிவானது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
தற்போது நுங்கம்பாக்கத்தில் 14 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 40 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம். புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது.
அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015-ம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை.
நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.
என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் உள்ளனர். இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா
