Pudukkottai Porpanaikottai excavation: புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் பழந்தமிழர்கள் நெசவு செய்ய பயன்படுத்திய எலும்பு முனைக் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் பழந்தமிழர்கள் நெசவு செய்ய பயன்படுத்திய எலும்பு முனைக் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

"பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டுநுண் வினைஞர் காருகர் இருக்கையும்" என்றுரைக்கிறது சிலப்பதிகாரம். பழந்தமிழர்கள் ஆடையானது பட்டு, மயிர், பருத்தி ஆகிய இம்மூன்றினாலும் நெய்யப்பட்டதாக உணர்த்துகிறது இந்தப்பாடல்.

வனத்துறையில் 72 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி! தேர்வு எப்போது?

ஆடை நெய்யும் தொழிலான நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி', புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் இன்று 192-196 செ.மீ ஆழத்தில், 7.8 கிராம் எடையுடன், 7.4 செ.மீ நீளம் மற்றும் 1 செ.மீ விட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடைந்த தங்கத்தின் சிறு பகுதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே இடத்தில் தங்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், புதிய கண்டுபிடிப்புகள் இங்கு வாழ்ந்த மக்கள் செழிப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததை உணர்த்துகிறது. பழந்தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் இந்த புதிய கண்டுபிடிப்புகள் பெருமகிழ்வைத் தந்துள்ளது"

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

ஆளுநர் - மாநில அரசு மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு: உச்ச நீதிமன்றம்

Scroll to load tweet…