Forest Department Vacancy: தமிழக வனத்துறையில் உள்ள 72 காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வனத்துறையில் உள்ள 72 காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதன் மூலம் வனத்துறையில் காலியாக உள்ள வரைவாளர், இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் ஆகிய பணிகளுக்கான 72 காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34 வரைவாளர் பணியிடங்களும், 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக வனத்துறை தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி கோரியிருந்தார். வனத்துறையின் இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

வனத்துறைத் தலைவர் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசுக காலியாக இருக்கும் 72 வனத்துறை நிரப்ப அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.