Asianet News TamilAsianet News Tamil

நந்தியின் வாயிலிருந்து ரத்தம் வழியும் அதிசயம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது 'இலங்குடி" என்ற கிராமம். ரத்தம் போல் வழியும் திரவம்…. அதிசய நந்தி ! பொதுவாக எல்லா சிவன் கோவிலிலும் நந்தி இருப்பதை பார்த்திருப்போம். 

blood bleed the nandhi statue
Author
Chennai, First Published Oct 1, 2018, 8:34 PM IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது 'இலங்குடி" என்ற கிராமம்.ரத்தம் போல் வழியும் திரவம்…. அதிசய நந்தி ! பொதுவாக எல்லா சிவன் கோவிலிலும் நந்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சிவகங்கை இலங்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் சற்றே வித்தியாசமான சிறப்பு வாய்ந்த ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது.

ஆம், அப்படி என்ன சிறப்பு என்றால், பல நூறு ஆண்டுகளாக இந்த நந்தியின் வாயில் இருந்து வித்தியாசமான ரத்தம் போன்ற திரவம் வழிந்தபடியே உள்ளது. அந்த அதிசய நந்தி சிலையை பற்றி பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது ‘இலங்குடி” என்ற கிராமம். பல ஆண்டு காலத்திற்கு முன்பாக இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது.

இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது. தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தப்படியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.

இந்த நந்தி சிலையை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சி அடைந்தனர். அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தபடியே தான் இருந்தது.

அந்த ஊர் மக்கள், சிலையின் திரவ சுரப்பையே தங்கள் கால கடிகாரமாக நம்பி விவசாயம் செய்வதாக கூறுகிறார்கள். சிலையில் திரவம் அதிகமாக சுரந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர்.

அங்கு எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை

Follow Us:
Download App:
  • android
  • ios