Asianet News Tamil

இந்த வருஷம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியுமா?: ஜல்லிக்கட்டு போல் வெடியில் கை வைக்கும் டெல்லி!

‘ஜல்லிக்கட்டுக்கு தடை’ என்பதை கொண்டு வந்து தைப்பொங்கலை  உப்புசப்பில்லாமல் ஆக்கிட  பா.ஜ. அரசு முயன்றது போல், இந்த வருடம் பட்டாசுக்கு தடையை கொண்டு வரப்போகிறார்கள்.

Ban for Diwali crackers in this year?
Author
Tamil Nadu, First Published Oct 14, 2019, 12:04 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சண்டையில்லாத ரஜினிகாந்த் படத்துக்கு பக்கா நிகரானது பட்டாசு இல்லாத தீபாவளி. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தில்தான் அதிகமாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்படுகிறது என்று ஒரு  சர்வேயும் உள்ளது. தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவதை, தங்கள் சம்பிரதாயத்தின் ஒரு உச்சமாகவே பார்க்கின்றனர் தமிழர்கள். 
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘ஜல்லிக்கட்டுக்கு தடை’ என்பதை கொண்டு வந்து தைப்பொங்கலை  உப்புசப்பில்லாமல் ஆக்கிட  பா.ஜ. அரசு முயன்றது போல், இந்த வருடம் பட்டாசுக்கு தடையை கொண்டு வரப்போகிறார்கள். கடந்த நாளாளுமன்ற தேர்தலில் தங்கள் அணிக்கு வாக்களிக்காமல் தவிக்க விட்ட தமிழகத்தின் மீது பாரதிய ஜனதா காட்டும் பெரிய அடக்குமுறை இது!என்று பொங்க துவங்கியுள்ளன சில அமைப்புகள். பட்டாசுக்கு ஆப்பு! எனும் ‘டேக் லைன்’உடன் இவர்கள் சுட்டிக்காட்டும் ஹைலைட் பாயிண்டுகள் இதோ....

  * தீபாவளி சமயத்தில் பட்டாசு கொளுத்துவதால் அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசு உருவாகிறது எனும் ‘சூழலியல்’ கருத்து கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, அரசியல் கருத்தாக உருமாறியுள்ளது. பா.ஜ.க. இதை பெரியளவில் கையிலெடுத்து தமிழகத்துக்கு எதிராக கொடி பிடிக்கிறது. 
  * சிவகாசி பட்டாசு உற்பத்தியில், ‘பேட்ரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. சரவெடி தயாரிக்க கூடாது. பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும்.’ என்று கடந்த ஆண்டு தீபாவளியின் போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவை, இந்த ஆண்டு மிக கடுமையாக அமல்படுத்த துடிக்கிறது பா.ஜ. அரசு.                                                                                                        *மத்திய் அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆயுவு மையம் எனப்படும் ‘நீரி’ அமைப்பின் விஞ்ஞானிகள், ‘பசுமைப் பட்டாசு’ எனும் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. இதை  கண்டு சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் அலறுகின்றனர். 
  *காரணம் அந்த பட்டாசு பழைய காலத்து ஓலை வெடியை விட மோசமாக இருக்கிறது. 
  *லட்சுமி வெடி, அணுகுண்டு போன்ற வெடிகளில், மூலப்பொருட்களின் அளவையும், பட்டாசுகளின் சைஸ்களையும் குறைத்துவிட்டால் அந்த பட்டாசுகளால் குறைந்த மாசு வெளிப்படும் என்று ஒரு ட்ரிக்கை கையாண்டுள்ளனர். எனவே லட்சுமி வெடி, அணுகுண்டு போன்றவை இந்த ஆண்டு தீபாவளியை  ஆர்ப்பரிக்க வைக்காது. 
  *சங்கு சக்கரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்பு போன்றவற்றுக்கு அனுமதியே இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது விண்ணப்பம்.

  *இப்படி தங்கள் தொழிலில் கைவைக்கப்படுவதால், பசுமைப்பட்டாசு பக்கம் போகாமல், வழக்கம்போல் பழைய ஸ்டைலில் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு பட்டாசு தயாரித்து வைத்துள்ளனர் சிவகாசியின் நூற்றுக்கணகான பட்டாசு நிறுவனங்கள். 
ஆனால் தங்களின் உத்தரை மீறியுள்ளதால் இந்த பட்டாசுகளை விற்பனை செய்ய தடை போடும் முடிவில் டெல்லி அதிகார மையங்கள் இருக்கின்றனவாம். 

  *வெடிச்சத்தமும், பளீர் வெளிச்சமும் இல்லாத பட்டாசுகளால் இந்த ஆண்டு தீபாவளி கலகலப்புடன் இருக்காது என்றே தெரிகிறது.................என்கிறார்கள். சுற்றுச் சூழலின் நன்மை குறித்து அரசாங்கம் கவலைப்படுவது நல்லதுதான். ஒரு நாள் கூத்துக்காக இயற்கையை வஞ்சிக்க கூடாது. 

ஆனால் அதற்காக, முறையான ஆய்வை மேற்கொள்ளாமலும்,  சம்பந்தப்பட்ட அரசு துறைகள்  தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் ஈகோ உணர்வுடன் செயல்பட்டும்! மொக்கையான பட்டாசை உருவாக்குவது எந்த வகையில் நியாயம்? 
சுற்றுச்சூழல் முக்கியம் என்பது போல மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கமும் முக்கியம்தானே! என்பதே மக்கள் அமைப்புகளின் வாதம். 
கவனிப்போம்!

Follow Us:
Download App:
  • android
  • ios