Asianet News TamilAsianet News Tamil

பாஜக எங்கிருக்கிறதோ அங்கு நாங்கள் இருக்க மாட்டோம்.! திமுகவை அலறவிட்ட கம்யூனிஸ்ட்

தமிழக அரசியலில் திமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவில் இரு கட்சிகளும் இணைந்து பங்கேற்றது இக்கூற்றிற்கு வலு சேர்க்கிறது. ஆனால், பாஜகவுடன் எந்தவித ரகசிய உடன்பாடும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் மறுத்துள்ளார்.

Balakrishnan said that where there is BJP there will be no Marxist Communist KAK
Author
First Published Aug 20, 2024, 10:26 AM IST | Last Updated Aug 20, 2024, 10:26 AM IST

தமிழக அரசியலில் மாற்றமா.?

தமிழகத்தில் பாஜகவிற்கு எதிராக திமுக அரசியல் செய்து வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.  அந்த வகையில் திமுகவும் பாஜகவும் இணக்கமாகவே செல்வதாக கூறப்படுகிறது. இதற்கு வாய்ப்பாக அமைந்தது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நாணயம் வெளியிட்டு விழாவாகும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நூற்றாண்டு நாணயத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  சென்னையில் பிரம்மாண்டமாக அரங்கேறிய இந்த விழாவில் திமுகவும் பாஜகவும் கைகோர்த்து பங்கேற்றனர். கலைவாணர் அரங்கம் முழுவதும் திமுகவும்-பாஜகவும் கூடியிருந்தனர். இந்த நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிட்டு விழாவா அல்லது திமுக பாஜக கூட்டணி ஒப்பந்தமா என்ற கேள்வி எழுப்பும் வகையில் ஒன்று பிணைந்து கலந்து கொண்டனர்.

சும்மா கிளப்பிவிடாதீங்க.! ரகசிய உறவுக்கு அவசியமே இல்லை- டென்சனான ஸ்டாலின்

கலைஞர் நினைவிடத்தில் பாஜக தலைவர்கள்

இது மட்டும் இல்லாமல் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவிற்கு  பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தனர்.  இந்தியாவில் இதுபோன்ற தலைவர் தலைவர்களே இல்லை என்ற அளவிற்கு பெருமைப்படுத்தி பேசினார்கள். அடுத்த கட்ட நிகழ்வு இன்னும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங்கோடு  மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பங்கெடுத்து மரியாதை செலுத்தினர். அரசு விழாவாக இருந்தால் நாணயம் வெளியீட்டோடு முடிந்திருக்கும்.  ஆனால் இது அரசியல் நிகழ்வுக்கு அச்சாரம் போடும் வகையில் தான் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு பாஜக தலைவர்கள் சென்றதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் மத்தியில் பாஜகவிற்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் புதிய கட்சிகளின் ஆதரவை தேடுவதற்காக பிரதமர் மோடி வலை வீசி வருகிறார் அந்த வகையிலேயே திமுகவிற்கு வலை வீசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ரகசிய உறவா- ஸ்டாலின் மறுப்பு

ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக உடன் எந்த வித ரகசிய உடன்பாடும் வைக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என தெரிவித்தார். இந்த நிலையில் பாஜகவும் திமுகவும் நெருங்கி வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பாஜக எங்கிருக்கிறதோ அந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கருணாநிதி நூற்றாண்டு விழாவிற்கு ராஜ்நாத் சிங்கை அழைத்தாலும் அடிப்படையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு விடும் என கூறமுடியாது. பாஜக தன்னை மாற்றிக்கொள்ள வழியே இல்லை. நாணயத்தை வெளியிட வேண்டும் என திமுக அரசு  கோரிக்கை வைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு நாணயம் வெளியிட்டுள்ளார். இதனை ஏற்ற மத்திய அரசு ஏன் தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லையென கேள்வி எழுப்பினார்.

மாறும் அரசியல் களம்.! ராகுலுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்.? பாஜக- திமுக நெருக்கத்தின் பின்னனி என்ன.?

கமயூனிஸ்ட் இருக்காது

எனவே தமிழக மக்களை புறந்தள்ளுவதில் இருந்து மாறவில்லை. இந்த சூழலில் பெரிய அடிப்படை அரசியல் மாற்றம் வராது. பாஜகவோடு இணைக்கமாக திமுக செல்லும் நிலை இல்லை. அதற்கான சூழலும் இல்லை. திமுகவுடன் பாஜக கூட்டணி வந்தால் பார்க்கலாம். அதற்கான வாய்ப்பு இல்லை. நிச்சயமாக பாஜகவோடு யார் சேர்ந்தாலும் எதிர்க்கிற அணியில் தான் இருப்போம் என கே பாலகிருஷ்ணன் கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios