சென்னையில் உல்லாசமாக இருந்த போது உடல் நிலை பாதிக்கப்பட்டு காதலன் இறந்த துக்கம் தாளாமல் காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.

 நாகை மாவட்டம் வேதாரண்யம் செட்டிபுரத்தை சேர்ந்தவர் தென்னவன். இவர் சென்னையில் தங்கியிருந்து ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். இவருக்கு சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அஸ்வினி எனும் சட்டக்கல்லூரி மாணவியுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அஸ்வினி – தென்னவன் ஜோடி மிக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 3ந் தேதி அஸ்வினியின் குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டனர். அஸ்வினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் தனது காதலன் தென்னவனை வீட்டிற்கு வருமாறு அஸ்வினி அழைத்துள்ளார். இதனை ஏற்று திருவொற்றியூரில் உள்ள அஸ்வினி வீட்டுக்கு தென்னவன் சென்றுள்ளார். இரவு உணவை தயாரித்து அஸ்வினியும் – தென்னவனும் சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டு முடித்த பிறகு இரவு அஸ்வினி வீட்டிலேயே தங்குவது என்று தென்னவன் முடிவெடுத்துள்ளார். இதன் பிறகு அஸ்வினி – தென்னவர் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. உல்லாசமாக இருந்த போதே திடீரென தென்னவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன அஸ்வினி அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து தென்னவனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் தென்னவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தென்னவன் எப்படி இறந்தார் என்பதில் மர்மர் நீடித்தது. உணவில் ஏதேனும் கலந்துவிட்டதா என்று கூட போலீசார் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை. மேலும் அஸ்வினியிடம் நடந்த விசாரணையின் போது கூட போலீசாரால் தென்னவன் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அஸ்வினி தனது பெரியப்பா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். காதலன் இறந்த துக்கத்தில் இருந்த அஸ்வினி சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உறங்காமல் இருந்து வந்துள்ளார்.

 இந்த நிலையில் நேற்று மாலை வெளியே சென்ற அஸ்வினியின் பெரியப்பா குடும்பத்தினர் இரவு வீடு திரும்பினர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த அஸ்வினி மன உலைச்சல் மற்றும் மன நெருக்கடியால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.