சிதம்பரம் கோவில் விவகாரம்.. செய்தி வெளியிட்ட பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா - உயர்நீதிமன்றதின் ஆக்சன் என்ன?
சூர்யா தலைமறைவாக உள்ளார் என்று கூறி, முன்னர் மதுரை சைபர் கிரைம் போலீசார் மனு ஒன்றை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜகவின் மாநில செயலாளராக பணியாற்றி வருபவர் தான் எஸ்.ஜி சூர்யா, சென்னையை சேர்ந்த இவர் சில வாரங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி குறித்தும் மதுரைஐ சேர்ந்த எம்.பி வெங்கடேசன் அவர்களை குறித்தும் தனது twitter வலைதளத்தில் பொய்யான சில தகவல்களை பரப்பியதாக கூறி இவர் மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் மதுரை போலீசார் அவரை கைது செய்தனர், அதனை தொடர்ந்து ஜாமினுக்காக மனு அளித்த எஸ். ஜே சூர்யாவிற்கு, மதுரை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் தினமும் காலை வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் சுமார் பத்து நாட்களுக்கு பிறகு அவர் கையெழுத்திட காவல் நிலையத்துக்கு வரவில்லை என்று கூறியும், அவர் தலைமறைவாக உள்ளார் என்று கூறியும் அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிற ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை சைபர் கிரைம் போலீசார் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
சாகசம் என்ற பெயரில் அரசுப்பேருந்தை மறித்து அடாவடி செய்த இளைஞர்
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டது குறித்து அவர் ஒரு செய்தி பதிவிட்டிடுந்தார். அது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழலை உண்டாகியுள்ளது என்று கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிதம்பரம் கோவில் வழக்கில் தான் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில், அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். தற்போது எஸ். ஜே சூர்யாவிற்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் மறு உத்தரவு வரும் வரை காலை மற்றும் மாலை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
தமிழ்நாடு நாள்: அனைத்து மாவட்டங்களிலும் பேரணி, புகைப்பட கண்காட்சி!