அதிமுக அழிந்து வருகிறது.. எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி.. எனக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை- அண்ணாமலை பதிலடி

அதிமுக கண் முன் கரைந்து வருகிறது. கோவையில் ஜஸ்ட் டெபாசிட் வாங்கியுள்ளது.  3வது 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கண்ணாடி முன் எடப்பாடி பார்க்க வேண்டும். கண்ணாடி அவருக்கு அறிவுரை சொல்லும் என எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 

Annamalai said that Edappadi Palaniswami is destroying AIADMK KAK

அண்ணாமலை இபிஎஸ் மோதல்

அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார் எனவும்,  எந்த மத்திய அரசு திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல், வாயில் வடை சுட்டு வருகிறார் என எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைக்கு கண் முன்னாள் அதிமுக என்கின்ற கட்சியை அதன் தலைவர்கள் சுயலாபத்திற்காக அழித்து வருகிறார்கள். இதனை தமிழகத்தில் அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டுள்ளார்கள். அதிகார வெறிக்காக அதிமுகவை அழிக்கிறார்கள்.  கூட இருக்கும் இரண்டு பேரை பத்திரிக்கையில் பேச வைத்து அதிமுகவை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

EPS vs Annamalai : மெத்தப்படித்தவர்.. அரசியல் ஞானி.. வாயால் வடை சுடும் அண்ணாமலை..! இறங்கி அடிக்கும் எடப்பாடி

நம்பிக்கை துரோகி எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். சிலரின் லாபத்திற்காக அதிமுக அழிந்து கொண்டு உள்ளது. அதிமுக தொண்டர்கள் மாற்றுக்கட்சியை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக பாஜகவை நோக்கி பெரும் அளவில்  படையெடுத்து வருகிறார்கள். இதன் தாக்கம் தான்  2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவித்தார்.  நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும். பிரதமர் மோடி அவர் பக்கத்திலேயே அமர வைத்தார். பாஜக வேண்டாம் என சென்றார்கள். இதற்கு மக்கள் என்ன பாடம் புகட்டினார்கள் என்பது நாடாளுமன்ற தேர்தலில் தெரிந்தது. பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்தார்கள்.

அறிவுரை தேவையில்லை

தமிழக அரசியல் வரலாற்றில் கின்னஸ் ரெக்கார்டாக டெபாசிட் இழந்தார்கள். மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி 134 வாக்குறுதி கொடுத்தார்கள் எப்போது நிறைவேற்றப்போகிறார். கோவைக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்,. எடப்பாடி பேசும் முன் சிந்தித்து பேசவேண்டும்.  கோவையில் வீரவசனம் பேசுகிறார். பாஜகவை பற்றி குறை சொல்கிறார்கள். கோவை உங்கள் கோட்டை தானே..  ஜஸ்ட் டெபாசிட் வாங்கினார்கள். 6 தொகுதியில் 3 இடங்களில் டெபாசிட் காலி, எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை சொல்கிறார்.

ஆனால் அதிமுக கண் முன் கரைந்து வருகிறது. கோவையில் ஜஸ்ட் டெபாசிட் வாங்கியுள்ளார்கள். 3வது 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கண்ணாடி முன் எடப்பாடி பார்க்க வேண்டும். கண்ணாடி அவருக்கு அறிவுரை சொல்லும். எனவே எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை சொல்ல தேவையில்லையென அண்ணாமலை கூறினார். 

Alexis Sudhakar : பாஜக மாநில செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது.. யார் இந்த அலெக்ஸிஸ் சுதாகர்? பரபரப்பு தகவல்

இடைத்தேர்தல் தோல்வி

எடப்பாடியின் சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதிமுக தொடர் தோல்வி, ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தான் நிற்கும் என கூறினார். ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறினார். ஓபிஎஸ் போட்டியிடாமல் தடுங்கள் என தெரிவித்தார். அதனால் கம்பீரமாக ஓபிஎஸ் ஒதுங்கி நின்றார். எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள் என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios