EPS vs Annamalai : மெத்தப்படித்தவர்.. அரசியல் ஞானி.. வாயால் வடை சுடும் அண்ணாமலை..! இறங்கி அடிக்கும் எடப்பாடி

அண்ணாமலை போற்ள தலைவரால் தான், 300க்கும் மேற்பட்ட தொகுதியை பெற்ற பாஜக, இப்போது சறுக்கி கூட்டணியில் தயவில் ஆட்சியில் இருப்பதற்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

EPS has criticized Annamalai for creating the illusion that the BJP has grown in Tamil Nadu KAK

அண்ணாமலை அரசியல் ஞானி- இபிஎஸ் கிண்டல்

தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, அதிமுகவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,  அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு காரணம் தெரிவித்துள்ளோம். இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி அவர். அவரது கணிப்பு அப்படி உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

Anbumani : சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்? 10 கேள்வியை லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அன்புமணி

மாய தோற்றத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறியுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படியெல்லாம் நடந்துகொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆடு மாடு போல் மக்களை பட்டியில் அடைத்து பரிசு, பணம் கொடுத்து தேர்தலை சந்திதனர்.அப்போது அண்ணாமலை எங்கள் கூட்டணியில் தான் இருந்தார். அவருக்கும் இது நன்றாகத் தெரியும். இருந்தும் அதிமுக நிலைபாடு குறித்து இப்படி சொல்வது கண்டித்தக்கது.

அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல.இந்த தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் திமுகவை விட குறைவாக பெற்றுள்ளார். பின் எப்படி வளர்ந்துள்ளது என கூற முடியும்.

வாயில் வடை சுடும் அண்ணாமலை

முந்தைய தேர்தலில் 18.8 % பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 18.28 %  பாஜக கூட்டணி பெற்றுள்ளது. அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டு தான் வருகிறது. தினம்தோறும் பேட்டி மட்டுமே அண்ணாமலை கொடுத்து வருகிறார். மற்ற காட்சிகளை பற்றியே பேசி வருகிறார். எந்த மத்திய அரசு திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல், வாயில் வடை சுட்டு வருகிறார்.

100 நாளில் 500 வாக்குறிதுகள் என பொய் சொல்லி தான் வாக்கு பெற்றுள்ளார். உண்மையை சொல்லி அண்ணாமலை வாக்கு பெறவில்லை. இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் உள்ளது. கொடுத்த வாக்குறுதியை செய்வாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அண்ணாமலை போன்ற  தலைவர்களால் தான், 300க்கும் மேற்பட்ட தொகுதியை பெற்ற பாஜக, இப்போது சறுக்கி கூட்டணியில் ஆட்சியில் இருப்பதற்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Alexis Sudhakar : பாஜக மாநில செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது.. யார் இந்த அலெக்ஸிஸ் சுதாகர்? பரபரப்பு தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios