நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா..! மின் கட்டண உயர்வுக்கு எதிராக சீறிய அண்ணாமலை

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தப்பட இருப்பதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Annamalai has condemned the increase in electricity tariff in Tamil Nadu

மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு கடிதம்

தமிழகத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக மின்சார கட்டணம், பேருந்து கட்டணம்  உயர்த்த இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவியது. ஆனால் தமிழக அரோச இதனை மறுத்து வந்தது. இந்தநிலையில் மின்‌ கட்டணத்தை திருத்தி அமைப்பது குறித்து மின்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். வருவாய் மற்றும் கடன் சுமைகளை சுட்டிக் காட்டிய அமைச்சர், 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்த்து வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். . கடந்த 10 ஆண்டுகளில்  மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் உயர்கிறது மின் கட்டணம்.. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? இதோ முழு விவரம்.!

Annamalai has condemned the increase in electricity tariff in Tamil Nadu

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு

எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறி, மாற்றப்பட்டுள்ள புதிய கட்டண விபரங்களை தெரிவித்தார்.  முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம் என தெரிவித்தவர்,  இருந்தாலும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லையென குறிப்பிட்டார்.  2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும். 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது எனவும் கூறினார். மேலும் 2 மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரவுள்ளது. இதே போல யூனிட்கள் அதிகரிக்க அதிகரிக்க மின் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதற்கான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுங்கள்... திமுக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

Annamalai has condemned the increase in electricity tariff in Tamil Nadu

ஊழல் பிடியில் மின் வாரியம்

இந்த மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  பல சாக்குப்போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின் துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார் என தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.  நீங்கள் செல்லச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? எனவும் அண்ணாமலை  கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது... 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் மின் கட்டணம்!!


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios