மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுங்கள்... திமுக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என திமுக அரசு அமமுக தலைவர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

ttv dhinakaran asks dmk govt to roll back electricity tariff hike

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என திமுக அரசு அமமுக தலைவர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வதாகவும் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அதன்படி, 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம். இதேபோல் மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம்.

இதையும் படிங்க: மாப்பிள்ளை அவர்தான் ஆனால் சட்டை என்னோடது.. ஒலிம்பியாட்டில் ஸ்டாலின் கதை இதுதான்.. செமயா கலாய்த்த அண்ணாமலை.

ttv dhinakaran asks dmk govt to roll back electricity tariff hike

கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம் என்ற அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் திமுக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மின்கட்டண உயர்வு என்ற அடுத்தப் பரிசை வழங்கியிருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாக சொன்னவர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களின் தலையில் இடியாகவே விழுந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: மாணவி வழக்கை CBI-க்கு மாற்றுங்க.. விடியா அரசு உஷாரா இருந்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது.. ஜெயக்குமார்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். இது தான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? ஏற்கனவே, நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து திமுக அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios