அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், இந்த கொடுங்கோல் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் நூறு நாட்கள் நடைபெறும் மேற்கொண்டு இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறைக்கு வருகை புரிந்தார். கால் டாக்ஸ் பகுதியில் இருந்து சின்னக்கடை வீதி வரை தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே நடந்து வந்த அவர், பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது திமுக கொடுங்கோல் ஆட்சியை நீக்கவேண்டும். இந்த தேர்தலில் யார் வர வேண்டும் என மக்கள் முடிவெடுக்க வேண்டும். 3 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி தந்த உங்களுக்கு ஏமாற்றம் தான் தந்தார். இந்த மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக ஆக்க நாம் தான் காரணம். முதல்வருக்கு எந்த துறைக்கும் சம்பந்தம் இல்லை. சாராயம் கஞ்சா மணல் கொள்ளைக்கு முதல்வருக்கு தொடர்பு உண்டு.
மணல் கொள்ளை அடிக்க தான்
இந்தியாவில் பஞ்சாபில் போதை அதிகம். ஆனால் தற்போது தமிழகத்தில் தான் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு திமுகவும், முதல்வரும் தான் காரணம். தப்பி தவறி மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் குழந்தைகள் வாழ்வு பறிபோகும். எனவே திமுகவை ஒதுக்கவேண்டும். நேபாளம், பங்களாதேஷ் போல் நடந்த ஆட்சிமாற்றம் போல் தமிழகத்தில் வர வேண்டும். மத்திய அரசில் அமைச்சராக இருந்த போது போலியோவை ஒழித்து 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தேன். பாதுகாக்க பட்ட வேளாண்மை மண்டலமாக நான்தான் மாற்றினேன். ஆனால் 4 1/2 ஆண்டு ஆட்சி செய்யும் திமுக ஒரு நீர்பாசன திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அளக்குடியில் தடுப்பனை கட்டினால் உப்புநீர் உள்ளே வராது. தடுப்பனை கட்டாததற்கு காரணம் மணல் கொள்ளை அடிக்க தான்.
திமுக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
திமுக விடியலை தேடி என்பதற்கு விடியல் எங்கே என்று நூல் எழுதி உள்ளேன். 13% தோல்வியடைந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது. 56 வாக்குறுதியில் விவசாயிகளுக்கு 8 தான் நிறைவேற்றி உள்ளனர். தமிழகத்தை விட பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களில் ஓய்வூதியம் தருகிறார்கள். திமுக தந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வெறும் பொய்தான் சொல்கிறார்கள். கோயபல்ஸ் போல் பொய்யை பல முறையை சொன்னால் மக்கள் ஏற்றுகொள்வார்கள். இது ஒரு கோயபல்ஸ் ஆட்சி, ஸ்டாலின் சூட்டிங் வருவது போல் வருகிறார்.
மருத்துவ கல்லூரி ஏன் கொண்டு வரவில்லை
வருகிற தலைமுறை பிச்சை எடுக்க விட கூடாது. மயிலாடுதுறையில் ஏன் மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியவில்லை? கலை அறிவியல் கல்லூரிகளில் 80 ஆயிரம் பேர்தான் சேர்ந்துள்ளனர். 30 ஆயிரம் மாணவர்கள் சேரவில்லை காரணம் ஆசிரியர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
