Asianet News TamilAsianet News Tamil

KC Palanisamy: அரசியல் களம் அதிமுக - திமுக தொடரனும்னா.. இது நடந்தே ஆகணும்.. பாஜகவை எதிராக கே.சி. பழனிசாமி!

நல்ல முயற்சி, புரட்சித் தலைவரை நெடுஞ்செழியன், மாதவன், பஉச, மதுரை முத்து போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்தினார். 

AIADMK is the right movement to defeat DMK.. They should unite.. KC Palanisamy tvk
Author
First Published Jun 11, 2024, 8:42 AM IST

திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அஇஅதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கே.சி.பழனிசாமி  கூறியுள்ளார். 

அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், பெங்களூரு புகழேந்தி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை கடந்த ஜூன் 8-ம் தேதி தொடங்கினர். இந்நிலையில் திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். 

இதையும் படிங்க: அப்படினா இபிஎஸ் பொய் சொன்னாரா? அல்லது வேலுமணி மீண்டும் பாஜக கூட்டணிக்கு தூதுவிடுகிறாரா? கே.சி.பழனிசாமி!

AIADMK is the right movement to defeat DMK.. They should unite.. KC Palanisamy tvk

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல். நல்ல முயற்சி, புரட்சித் தலைவரை நெடுஞ்செழியன், மாதவன், பஉச, மதுரை முத்து போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்தினார். ஆர்எம்வீ, காளி முத்து, பி.ஹெச்.பாண்டியன் போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்கள் திரும்பி வந்த போது ஏற்றுக் கொண்டு கட்சியை வலிமையாக்கினார். மறப்போம் மன்னிப்போம் என்று அனைவரும் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து கட்சிதான் முக்கியம் என்ற எண்ணத்துடன் ஒன்று சேர வேண்டும். அஇஅதிமுகவின் இந்த பிரிவுகளை பயன்படுத்தி பாஜக வளர நினைக்கிறது. 

இதையும் படிங்க: ஆளுங்கட்சி தான் இப்படி இருக்குதுன்னா! எதிர்க்கட்சி அதுக்கு மேல! அரசியல் செய்யத்தெரியாத இபிஎஸ்! கே.சி.பழனிசாமி!

AIADMK is the right movement to defeat DMK.. They should unite.. KC Palanisamy tvk

அரசியல் களம் அஇஅதிமுக மற்றும் திமுக என்று தொடர வேண்டுமானால் அஇஅதிமுக ஒன்றிணைவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கு முந்தைய பிளவு  மற்றும் பிரிவின் போது அதன் பலன் திமுகவுக்கு சென்றது. இப்போது திமுக ஆட்சி மீது சகலருக்கும் அதிருப்தி பெருகி வரும் நிலையில் அஇஅதிமுகவும் அதை பயன்படுத்தாமல் தங்களுக்குள் போட்டியிட்டு கொண்டு இருந்தால் அதனால் மக்களிடம் எழும் அதிருப்தியும் ஆதரவாக பாஜகவுக்கு செல்லும். திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அஇஅதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கே.சி.பழனிசாமி  கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios