அப்படினா இபிஎஸ் பொய் சொன்னாரா? அல்லது வேலுமணி மீண்டும் பாஜக கூட்டணிக்கு தூதுவிடுகிறாரா? கே.சி.பழனிசாமி!
அண்ணாமலை சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வாங்கிய அளவு வாக்குகளை வாங்கவில்லை என்கிறார் வேலுமணி. ஆனால் அதே 2014 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது அந்த வாக்குகளை ஏன் அதிமுக பெறவில்லை.
பொள்ளாச்சி தொகுதியில் கிட்டத்தட்ட அதிமுகவுக்கு இணையான வாக்குகளை பாஜக பெற்றது எப்படி? என எஸ்.பி.வேலுமணி விளக்கமளிக்க வேண்டும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் அண்ணாமலைதான். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்திருந்தால் 30 முதல் 35 இடங்கள் கிடைத்து இருக்கும். பாஜக சார்பாக கடந்த முறை கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அப்போது அவர் வாங்கிய வாக்குகளை விட இந்த தேர்தலில் அண்ணாமலை குறைவாக தான் வாங்கியுள்ளார் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜகவுக்கு வேலுமணி மீண்டும் கூட்டணிக்கு தூதுவிடுகிறாரா? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ADMK : பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் 30 தொகுதிகளை வென்றிருக்கலாம்.! அண்ணாமலை தான் இதற்கு காரணம்- வேலுமணி
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவை நாங்கள் எதிரொலித்தோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இன்று அண்ணாமலை தான் காரணம் என்று வேலுமணி கூறுகிறார். இதில் எது உண்மை? அன்று எடப்பாடி பொய் சொன்னாரா? அல்லது இன்று வேலுமணி மீண்டும் கூட்டணிக்கு தூதுவிடுகிறாரா?
அண்ணாமலை சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வாங்கிய அளவு வாக்குகளை வாங்கவில்லை என்கிறார் வேலுமணி. ஆனால் அதே 2014 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது அந்த வாக்குகளை ஏன் அதிமுக பெறவில்லை என்பதற்கு வேலுமணி விளக்கமளிக்க வேண்டும். 2019-ல் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது அப்பொழுது 18% வாக்குகளை பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. 13 தொகுதிகள் அதிகம் போட்டியிட்டு வெறும் 2% வாக்குகள் தான் அதிகம் அதற்கு பதில் சொல்லவேண்டும்.
இதையும் படிங்க: திமுக, அதிமுகவை அலறவிட்ட பாஜக.. தென் சென்னை தொகுதியில் தாமரை இப்படியொரு அரசு வளர்ச்சியா?
பொள்ளாச்சி தொகுதியில் கிட்டத்தட்ட அதிமுகவுக்கு இணையான வாக்குகளை பாஜக பெற்றது எப்படி? நீலகிரியில் பாஜக இரண்டாம் இடம் பெற்றது எப்படி? அதிமுகவின் வீழ்ச்சியா? பாஜகவின் வளர்ச்சியா? இந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக இருக்கும் வேலுமணி இதுகுறித்து விளக்கமளிக்கவேண்டும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.