இந்த வரதராஜ பெருமாள் கோவிலை சேர்ந்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு சயன கோலத்தில் பாதி நாட்களும் மீதி நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி தருவார்.

மொத்தமுள்ள 48 நாட்களில் கடைசி நாள் மட்டும் ஆகம விதிகள் மற்றும் சம்பிரதாயங்களை செய்வதற்காக கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்கிறது மற்ற 47 நாட்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர் ஆகஸ்ட் 17ம் தேதியுடன் நிறைவடையும் அத்தி வரதர் தரிசனம் பல கோடி பேருக்கு கிடைக்காமலே போய்விட்டது என்று சொல்லலாம் 

கடைசி ஐந்து நாட்களில் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது இந்தக் கூட்டத்தை நினைத்து பயந்து கொண்டே இன்னும் பல லட்சம் பேர் தங்கள் ஆசை நிறைவேறாது என்பதை தெரிந்துகொண்டு வீட்டிலேயே முடங்கி விட்டனர்
 
உலகின் மிகப்பெரிய இந்து ஆன்மீக தளங்களில் ஒன்றான திருப்பதி திருமலைக்கு ஒருநாளைக்கு தற்போது வந்து செல்வோர் விவரம் 75 ஆயிரம் மட்டுமே ஆனால் மிகச் சிறிய ஊரான காஞ்சிபுரத்திற்கு ஒரு நாளைக்கு 5 லிருந்து 6 லட்சம் பேர் படையெடுக்கிறார்கள் என்றால் நினைத்துப் பாருங்கள் அந்த ஊரின் நிலைமையை.

கடந்த 40 நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான மக்கள் அதாவது ஒரு கோடிக்கும் மேல் இதுவரை அத்தி வரதரை தரிசனம் செய்து இருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் இறைந்து கிடக்கும் செருப்புகளின் எண்ணிக்கை மட்டும் பல லட்சத்தை தாண்டும் 

ஆம் அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குப்பை கூளங்கள் உணவு பொருட்கள் குப்பையாக குவிந்து கிடக்கின்றன. அதிகமான வாகனங்களின் வருகையால் சேதமான சாலைகள் என காஞ்சிபுரத்தை சீரமைக்கவும் இன்னும் பல நாட்கள் பிடிக்குமாம் 

இது ஒரு பக்கம் இருக்க 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன்  நிறைவடையும் அத்தி வரதர் தரிசனம் மீண்டும் 2059 ஆம் ஆண்டு தான் கிடைக்கும். வரும் 17ம் தேதி காலை முதல் பூஜை புனஸ்காரங்கள் ஆரம்பிக்கப்பட்டு அத்திவரதர் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த அனந்தசரஸ் குளத்தில் வெள்ளிப் பேழையில் வைக்கப்பட்டு தண்ணீருக்கடியில் அனுப்பப்படுவார் 

ஆம் எது எப்படியோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே பிரபலமாக இருந்து வந்த அத்திவரதர் தற்போது மீடியா புண்ணியத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மக்களுக்கும் காட்சி தருபவர் ஆக மாறிவிட்டார் 2019 இல் அத்தி வரதரை தரிசித்த எத்தனை புண்ணியவான்கள் 2059 தரிசிக்க போகிறார்கள் என்பது அத்தி வரதர் தான் அறிவார்