வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தில் கன மழைக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

கடந்த 24 நேரத்தில் தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும், 13 மிக கனமழையம் பதிவாகியுள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன், மே 7 அல்லது 8ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 

According to the Meteorological Department, a low pressure area is forming over the Bay of Bengal

கோடை மழைக்கு காரணம் என்ன.?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையானது பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பகுதிகளில் தற்போது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவி வருவதாகவும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகரித்துள்ளதாகவும்,  நிலப்பகுதிகளில் ஈரப்பதம்  அதிகரித்துள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது என்று கூறினார்.

சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..! அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்- தடை விதித்த வனத்துறை

According to the Meteorological Department, a low pressure area is forming over the Bay of Bengal

அதிகபட்ச மழை எங்கே.?

கடந்த 24 நேரத்தில் தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும், 13 மிக கனமழையம் பதிவாகியுள்ளதகாவும் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவி பகுதியில் 19 சென்டிமீட்டர், சங்கரி துர்கம் (சேலம்) 17, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 15, சாத்தூர் (விருதுநகர்) 14, திருச்செங்கோடு (நாமக்கல்) , திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) , நந்தியாறு (திருச்சி) தலா 13,  மழை பதிவாகியுள்ளதாக தெரிவிதார்.  அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும்,  நீலகிரி முதல் தேனி வரையிலான மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், சேலம் நாமக்கல் கரூர் திருச்சி மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

According to the Meteorological Department, a low pressure area is forming over the Bay of Bengal

சூறாவளிக்காற்று வீசும்- வானிலை மையம்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்குவங்க கடல் பகுதி, 02.05.2023 மற்றும் 03.05.2023:  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா - தமிழக கடலோரப்பகுதிகள்,  குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள்,  கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

According to the Meteorological Department, a low pressure area is forming over the Bay of Bengal

 காற்றழுத்த தாழ்வு பகுதி

எனவே இப்பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் வருகின்ற மே 6ஆம் தேதி  தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி அது 7அல்லது 8 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக கூடும் அது தொடர்ந்து கண்காணிக்கக்கூடும் என்றார்

இதையும் படியுங்கள்

மழையில் நனைந்து பாழான 20,000 நெல் மூட்டைகள் .! கொள்முதல் செய்யுங்கள் இல்லாவிடில் இழப்பீடு வழங்கிடுக- ராமதாஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios