மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்; சட்டசபை தேர்தல் முடிவுகள் யார் பக்கம்? - ஒரு பார்வை!
Maharashtra Jharkhand Election 2024 : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் 20ம் தேதி மகாராஷ்டிராவிற்கும், கடந்த நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய இரண்டு தேதிகளில் ஜார்க்கண்டிற்கும் மூன்று கட்டமாக சட்டமன்ற பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று நவம்பர் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகின்றது. மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் முன்னிலையிலும், அதே நேரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தற்போதைய நிலவரப்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா கட்சி 34 இடங்களை வென்று முன்னிலையில் இருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 16 இடங்களை வெற்றி பெற்றுள்ள நிலையில், முத்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி வலு பெற்று மீண்டும் ஜார்க்கண்டில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
உ.பி., மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி! முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழாரம்!
அதேபோல பாரதிய ஜனதா கட்சி 21 இடங்களை வெற்றி பெற்றிருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம்
கட்சி நான்கு இடங்களிலும், கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஜார்க்கண்ட் மாநிலத்தை பொருத்தவரை முத்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி வலுவான இடங்களில் வென்று முன்னிலையில் இப்போது இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலை பொருத்தவரை மொத்தம் 288 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பாஜக மற்றும் மகாயுதி கட்சி சுமார் 230 இடங்களை பெற்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நிலைநாட்டி இருக்கிறது. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் எம்விஏ கூட்டணி 50 இடங்களில் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாஜகவினர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வெற்றி பெற்றதை கொண்டாட தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.