இன்று வெளியாகிறது 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! - மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி? முழு தகவல்

தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

10th 11th class exam results will be declared tomorrow.. How to know the marks

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9,96, 089 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 24-ம் தேதியே தொடங்கப்பட்டது. மே 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இளங்கலை மாணவர் சேர்க்கை : தமிழகத்தில் எந்த படிப்புகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்?

https.www.tnresults.nic.in, https/www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் உடனடியாக அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க : தமிழக தேர்தல் ஆணையராக பழனிகுமார் மீண்டும் நியமனம்.! ஆளுநர் ரவி உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios