இளங்கலை மாணவர் சேர்க்கை : தமிழகத்தில் எந்த படிப்புகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்?
தமிழகத்தில் நடப்பண்டில் பி.காம்( B.Com General), பி.காம் சி.ஏ (B.Com CA) பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.sc. Computer science) ஆகிய படிப்புகளில் சேர அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை அரசுக் கலை கல்லூரியில் இளங்கலை படிப்புகளில் சேர நேற்று வரை 16,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பி.காம்( B.Com General), பி.காம் சி.ஏ (B.Com CA) பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.sc. Computer science) ஆகிய படிப்புகளில் சேர அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
கோவை அரசுக் கலை கல்லூரி முதல்வர் உலகி இதுகுறித்து பேசிய போது “ கடந்த சில ஆண்டுகளில் பி.காம், பி.காம் (சி.ஏ), பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். மாணவர்களின் முதன்மை தேர்வு பட்டியலில் பிபிஏவும் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : சென்னையில் நள்ளிரவில் பயங்கர சத்தம்.. அலறியடித்து எழுந்த பொதுமக்கள்.. நடந்தது என்ன?
இளங்கலை படிப்புகளில் விண்ணப்பிக்க மே 19 கடைசி தேதி ஆகும். கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே மேற்கூறிய 3 படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 164 அரசுக் கலை கல்லூரிகளும், 7 ஆசிரியர் கல்வி கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் மே 16 வரை 1,77,895 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சென்னை பிரெஸிடென்ஸி கல்லூரி, கோவை அரசுக் கலை கல்லூரி ஆகியவை அதிகபட்ச விண்ணப்பங்களை பெற்றுள்ளன. இவை தவிர கோவை அரசுக்கல்லூரி மற்றும் ஊட்டி கலை கல்லூரி ஆகிய கல்லூரிகள் பிஏ டிஃபென்ஸ் படிப்புக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகள் மொத்தம் 2,98,400 விண்ணப்பங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழக தேர்தல் ஆணையராக பழனிகுமார் மீண்டும் நியமனம்.! ஆளுநர் ரவி உத்தரவு