தமிழக தேர்தல் ஆணையராக பழனிகுமார் மீண்டும் நியமனம்.! ஆளுநர் ரவி உத்தரவு
தமிழக தேர்தல் ஆணையராக இருக்கும் பழனிகுமாரின் பதவி காலம் இந்த மாதம்(மே) இறுதியில் முடிவடையுள்ள நிலையில் அடுத்து ஆண்டு மார்ச் மாதம் வரை பதவி நீட்டித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் நடைபெறுள்ள நகராட்சி, ஊராட்சி, மாநாகராட்சி தேர்தலை சரியான முறையில் நடத்துவது தமிழக தேர்தல் ஆணையத்தின் பங்கு. இந்த ஆணையத்தின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார். தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னாட்சிப் பெற்ற அரசியலைமைப்பாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு பதவியேற்றது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய முக்கிய பணி திமுக அரசிடம் இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் 29.05.2021 இல் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற வேண்டி இருந்தது.
என்ன நடவடிக்கை எடுத்தீங்க? கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர் ரவி
பழனிகுமார் மீண்டும் நியமனம்
இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சிறப்பாக நடத்தி முடித்தார். இந்தநிலையில் இவரது பதவி காலம் இந்த மாத இறுதியோடு நிறைவடையவுள்ளது. தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி இடங்கள் காலியாக உள்ளது. அந்த பதவி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனையடுத்து பழனிகுமாரின் பதவி காலத்தை வருகிற 2024 மார்ச் மாதம் வரை நீடித்து தமிழக ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் பொறுப்பில் வகித்து வரும் பழனிகுமார், சுற்றுலா மற்றும் பொதுத்துறை என பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்