Asianet News TamilAsianet News Tamil

மூளை காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் பலி.. ஐயோ என்ன விட்டு போயிட்டியே சாமி.. கதறும் பெற்றோர்..!

கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக நிதிஷ்குமார் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

school student died of brain fever tvk
Author
First Published Nov 10, 2023, 1:26 PM IST | Last Updated Nov 10, 2023, 1:30 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் நிதிஷ்குமார் மூளைக்காய்ச்சலால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நிதிஷ்குமார்(10). மேட்டமலையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 5ம்  வகுப்பு படித்து வருகிறார்.

இதையும் படிங்க;- மக்களே உஷார்.. செல்போனில் பேசிய போது மின்னல் தாக்கி வாலிபர் துடிதுடித்து பலி..!

 இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக நிதிஷ்குமார் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இதையும் படிங்க;- யாருக்கு சார் வரும் இந்த மனசு.. அரசு கொடுத்த ரூ.25 லட்சத்தை தான் படித்த கல்லூரிகளுக்கு கொடுத்த வீர முத்துவேல்!

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளை காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாணவர் நிதிஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலியான பள்ளி மாணவரின் காய்ச்சலுக்கு காரணம் வீட்டின் அருகே அதிகளவில் பன்றிகள் வளர்பதை காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். ஆகவே ஊராட்சி நிர்வாகம் கிராம பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த  வேண்டும் என கோரிக்கை  வைக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios