மக்களே உஷார்.. செல்போனில் பேசிய போது மின்னல் தாக்கி வாலிபர் துடிதுடித்து பலி..!
லால்குடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை வெளுத்து வாங்கியது. அப்போது வீட்டில் இருந்த ஜெயக்குமார் ப்ளூடூத்தில் தனது செல்போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
திருச்சி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் ஜெயக்குமார்(28). இவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், நேற்று மாலை முதல் லால்குடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை வெளுத்து வாங்கியது. அப்போது வீட்டில் இருந்த ஜெயக்குமார் ப்ளூடூத்தில் தனது செல்போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- அரசு பேருந்தில் ஏதாவது குறையா? அப்படினா 149-க்கு கால் பண்ணுங்க.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
அப்போது வீட்டில் இருந்த ஜெயக்குமார் மீது இடி மின்னல் தாக்கி உள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார் அலறிய படி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனே சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- யாருக்கு சார் வரும் இந்த மனசு.. அரசு கொடுத்த ரூ.25 லட்சத்தை தான் படித்த கல்லூரிகளுக்கு கொடுத்த வீர முத்துவேல்!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.