சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் புஷ்வானம் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெடி விபத்தில் இருளாயி, ஐய்யம்மாள், சுந்தர்ராஜன், குமரேசன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி குமரேசன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே மாட்டு வண்டி மீது மோதி தூக்கி வீசப்பட்ட கார்; வீடியோ வெளியாகி பரபரப்பு

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாரனேரி காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் மெய்யநாதனின் கார் மோதி மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளை பலி