அமைச்சர் மெய்யநாதனின் கார் மோதி மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளை பலி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அமைச்சர் மெய்யநாதனை அழைக்கச் சென்ற கார் மோதி புதுமண தம்பதி தூக்கி வீசப்பட்ட நிலையில், மனைவி கண் முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டு இருந்தது.
அப்போது மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சலையில் அமைச்சர் மெய்யநாதனை அவரது வீட்டில் இருந்து அழைத்து வருவதற்காக அவரது கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது. எதிர்பாராத விதமாக அமைச்சரின் கார் புதுமண தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
பெண் கேட்டு தரமறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்; விழுப்புரத்தில் பரபரப்பு
இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த கணவர் ஜான்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொட்டியத்தில் மூதாட்டியை கட்டிப்போட்டு கொடூர கொலை; காவல்துறை விசாரணை