திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே 65 வயது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். ஓட்டுநராக பணியாற்றி உடல்நிலை குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மருந்தகம் நடத்தி வருவதுடன் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மகள் பிரியா திருமணம் முடிந்த நிலையில் திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்பகுதியினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை ராஜேஸ்வரியை பார்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

Crime: சேலத்தில் கூலி தொழிலாளி தலை சிதைக்கப்பட்டு படுகொலை; காவல் துறை விசாரணை

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் பார்த்தபோது ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் பொருட்கள் சிதறி கிடந்தது.

வடிவேலு பட காமெடியை குறிப்பிட்டு; தமிழக காவல், போக்குவரத்து துறையை பங்கமாக கலாய்த்த பாஜக

இதைத் தொடர்ந்து முசிறி காவல் டிஎஸ்பி யாஸ்மின், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையா ஆகியோர் ராஜேஸ்வரியின் சடலத்தை முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் காவல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வலையபட்டியில் இருந்து மகன் மணிகண்டன் வந்த பின்னர் தான் வீட்டிலிருந்த பணம், பொருட்கள் திருட்டு போனதின் மதிப்பு தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.