கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. லாரி மீது மோதிய தனியார் பேருந்து.. 15 பேருக்கு நேர்ந்த சோகம்.!
வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி 30கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு சென்றுக்கொண்டிருந்தது.
வேலூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி 30கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி நோக்கி முன்னாள் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலையை முடிச்சிடுங்க.. சென்னையில் முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை!
இதில், மாங்காய் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயங்கம் அடைந்தனர். உடனே காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக 7 பேர் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், 3 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... வெளியான முக்கிய அறிவிப்பு..!
மேலும் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.