Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலையை முடிச்சிடுங்க.. சென்னையில் முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ஆவடி, அடையார், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
பள்ளிக்கரணை ஒடிசா பவன், காமாட்சி மருத்துவமனை, மயிலை பாலாஜி நகர் பகுதி 1 முதல் 4 வரை, தந்தை பெரியார் நகர், சீனிவாச நகர், சிலிக்கான் டவர், சிடிஎஸ், வேளச்சேரி மெயின் ரோடு, ஆர்.வி.டவர்ஸ், பல்லாவரம் அம்மன் நகர், அன்னை அஞ்சுகம், சக்தி நகர், திரிசூலம், பல்லாவரம் கிழக்குப் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
ஐஐடி 7வது அவென்யூ, ருக்குமணி சாலை, டைகர் வரதாச்சாரியார் சாலை, கங்கை தெரு, ரங்கராஜபுரம், ஸ்ரீநகர் காலனி, தெற்கு அவென்யூ, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஆவடி:
பட்டாபிராம், ஐயப்பன் நகர், முத்துக்குமரன் நகர், விஜிவி நகர், கண்ணப்பாளையம், பாரதி தெரு, அன்பர் தெரு, புழல், திருமுல்லைவயல், கொள்ளுமேடு, அரிக்கம்பேடு, எம்இஜி சிட்டி, அருள் நகர், பிரியா நகர், வெள்ளனூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
மேனாம்பேடு, ஒரகடம், முருகம்பேடு, புதூர், விஜயலட்சுமிபுரம், வெங்கடேஸ்வரா நகர், காந்தி மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
காந்தி நகர், ஜிஎன்டி சாலை, சந்திர பிரபு காலனி, முத்தமிழ் நகர் 1 முதல் 8வது பிளாக் வரை, கொடுங்கையூர் முழுவதும், எருக்கஞ்சேரி, அண்ணாசாலை, செம்பியம் முழுவதும், கக்கன்ஜி காலனி, மணலி நெடுஞ்சாலை, செந்தில் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.