நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... வெளியான முக்கிய அறிவிப்பு..!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளளை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மகனாகப் பிறந்தவர் தீரன் சின்னமலை. இவர் இளம் வயதிலேயே பல்வேறு போர்க்கலைகளை கற்றுத்தேர்ந்தவர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை. இவரது நினைவு தினம் ஆடி 18ம் நாளான வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக நாளை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!
local holiday
உள்ளூர் விடுமுறையான நாளைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
Tiruppur district
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும். அதேபோல் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஆகஸ்ட் 3ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!