- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், தாம்பரம், ஆவடி, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தி.நகர்:
மேற்கு மாம்பலம்-I லேக் வியூ சாலை, பிருந்தாவனம் தெரு, ஜானகிராமன் தெரு, வாசுதேவபுரம், சக்ரபாணி தெரு, தம்பையா சாலை, கார்ப்பரேஷன் காலனி மெயின் ரோடு, மேற்கு மாம்பலம், குப்பையா தெரு, சுப்பா ரெட்டி தெரு, ஆர்யகவுடா ஜோதிராமலிங்கம் தெரு, புஷ்பாவதியம்மாள் தெரு, வண்டிக்காரன் தெரு, கே.ஆர்.கோவில் தெரு, காசிகுளம் ஆண்டியப்பன் தெரு, கோடம்பாக்கம் ரோடு 11வது அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
பெசன்ட் நகர், பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் கடற்கரை சாலை, ராஜா சீனிவாச நகர் மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு, சிஜிஇ காலனி, திருவான்மியூர் எல்பி சாலை, காமராஜ் அவென்யூ 2வது தெரு, டீச்சர்ஸ் காலனி, பலராமன் சாலை, கந்தன்வாசடி, பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பள்ளிக்கரணை-வேளச்சேரி மெயின் ரோடு, அழகிரி தெரு, பாரதியார் தெரு, பவானி அம்மன் கோயில் தெரு, பெருங்களத்தூர், கலைஞர் நெடுஞ்சாலை 1 முதல் 7வது தெரு, சிவசங்கர் தெரு, சூராத்தம்மன் கோயில் தெரு, அம்மன் கோயில் தெரு, கலைவாணி தெரு, டி.கே.சி தெரு, மணிமேகலை தெரு, பெரும்பாக்கம், சவுமியா நகர், மூவேந்தர் தெரு, அம்பேத்கர் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர், மாடம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, திருவாஞ்சேரி, அன்னை தெரசா தெரு, பல்லாவரம் ஜிஇ நிறுவனம், ராணுவ குடியிருப்பு, டிஆர்டிஓ, தாஜ் பைலட், பிபிசிஎல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கடப்பேரி நேரு நகர், நியூ காலனி, அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே.நகர்:
அரும்பாக்கம் சித்ரா வளாகம், நீலகண்டன் தெரு, கான் தெரு, சூளைமேடு ஹை ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஆவடி:
சிடிஎச் சாலை, சரஸ்வதி நகர், ஆர்த்தி நகர், தென்றல் நகர், அலமாதி எம்ஜிஆர் நகர், வாணியஞ்சத்திரம், புதுக்குப்பம் கிராமம், அயலச்சேரி, ராமாபுரம், ரெட் ஹில்ஸ், அழிஞ்சிவாக்கம், கொசப்பூர், விளாங்காடுபாக்கம், கண்ணம்பாளையம், செல்வவிநாயகர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
அம்பத்தூர்:
அயப்பாக்கம், டிவிகே சாலை, டிஜி அண்ணா நகர், கலைவாணர் நகர், ஐசிஎப் காலனி மற்றும் வானகரம் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.