Asianet News TamilAsianet News Tamil

இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா.. இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு ரூ.10,000 வழங்கிய பூல்பாண்டியன்..!

இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் அனுப்பி வைக்கும்படி கூறியிருந்தார். இதனை அவர் பெற்றுக்கொண்டார்.

A beggar who gave Rs.10,000 to the relief of Sri Lankan Tamils
Author
Vellore, First Published Jul 26, 2022, 3:09 PM IST

இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைக்குமாறு பிச்சைக்காரர் ஒருவர் வேலுார் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன்(72). பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, பூல்பாண்டியன் கோரிக்கை மனுவுடன் வந்தார். அதில், இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் அனுப்பி வைக்கும்படி கூறியிருந்தார். இதனை அவர் பெற்றுக்கொண்டார். 

இதையும் படிங்க;- டார்ச்சர் தாங்க முடியல.. என்னோட சாவுக்கு மாமியார்தான் காரணம்.. 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!

A beggar who gave Rs.10,000 to the relief of Sri Lankan Tamils

இதனையடுத்து, பூல்பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிச்சை எடுத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, எழுதுபொருட்கள், மேஜை போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ளேன். இதுவரை வெள்ள நிவாரணம், கொரோனா நிதி என இதுவரை ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் நிவாரண நிதியுதவி வழங்கி உள்ளேன் என்றார். 

A beggar who gave Rs.10,000 to the relief of Sri Lankan Tamils

தற்போது இலங்கை தமிழர்களின் நலனுக்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிச்சை எடுத்த பணத்தை நிவாரணமாக வழங்கி வருகிறேன். அதன்படி தற்போது வேலூர் மாவட்டத்தில் எடுத்த பிச்சை எடுத்த ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்காக முதல்மைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பி உள்ளேன் என்றார்.

இதையும் படிங்க;-  கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உளவுத்துறையில் சாதிய வாதிகள்.. விசிகவுக்கு எதிரான சதி.. அலறும் திருமா.!

Follow Us:
Download App:
  • android
  • ios