டார்ச்சர் தாங்க முடியல.. என்னோட சாவுக்கு மாமியார்தான் காரணம்.. 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!

சென்னை வேளச்சேரியில் திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் மாமியார் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newly married women commits suicide in chennai

சென்னை வேளச்சேரியில் திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் மாமியார் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25).  இவருக்கும் தி.நகரை சேர்ந்த குமரன் (37) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதலே இந்துமதியை அவரது மாமியார் சித்ரவதை செய்து வரதட்சணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்துமதி  தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனாலும்  மாமியாரின், தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் இந்துமதியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல  கணவரும் வரவில்லை. இதனால், கணவரும் கண்டுகொள்ளவில்லையே என்ற விரக்தியில்  தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இதையும் படிங்க;- அட கடவுளே! புடவைக்காக அக்காவுடன் சண்டை போட்டதால் கல்லூரி மாணவி ரயில் பாய்ந்து தற்கொலை? வெளியான அதிர்ச்சி தகவல்

newly married women commits suicide in chennai

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்காவின் செல்போனுக்கு ‘‘ 5 மாத சிசுவையும் கலைக்க மாமியார் முயல்கிறார். எனது சாவுக்கு மாமியார்தான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம்’’ என வாட்ஸ்அப்பில் ஆடியோவாக பதிவு செய்து அனுப்பி உள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அக்கா, விரைந்து வந்துள்ளார். வீட்டிற்கு வருவதற்குள் இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

newly married women commits suicide in chennai

இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்துமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்துமதிக்கு திருமணம் ஆகி 5 மாதமே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  முடிவெட்ட சொன்ன ஹெட் மாஸ்டர்.. நேராக சென்று பூச்சி மருந்தை குடித்த பிளஸ் 2 மாணவன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios