Asianet News TamilAsianet News Tamil

ராணிபேட்டையில் பயங்கரம்; தாய், 2 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

ராணிபேட்டை மாவட்டம் கலவை அருகே தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 dead bodies found and rescued well in ranipet district
Author
First Published Apr 28, 2023, 9:54 AM IST | Last Updated Apr 28, 2023, 9:54 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், சுருதிஹா (5), தீபக் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் இருந்த தனது இரண்டு குழந்தைகளையும் அவரது தாய் ரேணுகா அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் மூவரும் நீண்ட நேரமாக வீட்டிற்கு வரவில்லை என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கிராமத்தின் அருகே உள்ள ஏரிக்கரை ஓரமாக கிணற்றில் மூன்று சடலங்கள் இருப்பதாக மாடு மேய்க்கச் சென்ற நபர் கிராமத்தில் உள்ள நபர்களுக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் கலவை காவல் துறையினர் மற்றும்  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என மூன்று சடலங்களை மீட்டனர். 

Crime News: மதுரையில் மது போதையில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற 5 பேருக்கு வலை

மேலும் இதுகுறித்து கலவை காவல் துறையினர் கிணற்றில் இறந்து கிடந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை யாராவது கொலை செய்தார்களா? இல்லை கிணற்றில் தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லையெனில்  கிணற்றில் தவறி விழுந்தார்களா? என கலவை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டிலேயெ மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் மைதானம் தான் - அன்புமணி பேச்சு

கலவை அருகே மர்மமான முறையில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் கிணற்றில் இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios