Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டிலேயெ மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் மைதானம் தான் - அன்புமணி பேச்சு

தமிழ்நாட்டிலேயே பெரிய மதுபானக்கூடம் என்றால் அது சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான் என சின்னாளபட்டியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

pmk president anbumani ramadoss slams dmk government in dindigul meeting
Author
First Published Apr 27, 2023, 6:03 PM IST

திண்டுக்கல் தெற்கு மாவட்டம் சார்பாக சின்னாளபட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பாமக 2.0 என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம் நேற்று  சின்னாளப்பட்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுவையில் தமிழ்நாட்டிலேயே பெரிய மதுபான கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான் என்றும், திமுக ஆட்சியில் மதுபானம் வெள்ளகாடாக ஓடுகிறது. திமுகவை தோற்றுவித்தது அண்ணா. அவருடைய கொள்கை பூரண மதுவிலக்கு. தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அதனை செயல்படுத்துகிறதா என கேள்வி எழுப்பினர். 

மேலும் மதுவினால் வரும் வருமானம் தொழு நோயாளின் கையில் வெண்ணையை கொடுப்பது போல உள்ளது. எனவே மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அண்ணா கூறினார். இந்த ஆண்டு மதுவினால் வரும் வருமானம் 45 ஆயிரம் கோடி. அவர்களை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு இது வளர்ச்சி. என்னை பொருத்தவரையில் இது அசிங்கம், அவமானம். இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி அடுத்தாண்டு 50 ஆயிரம் கோடி. ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாக வருமானம் வருகிறது. 

திமுகவின் முதல் வாக்குறுதி, முதல் கையெழுத்து மதுவிலக்கு தீர்மானம். இதனை தற்போது திமுக அரசு செய்துள்ளதா? சட்டமன்றத்தில் அமைச்சர் பேசும்போது தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று கூறினார். தற்பொழுது வரை ஒரு கடை கூட மூடவில்லை. ஒரு காலத்தில் 8 மணி நேர வேலையை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என மேடைக்கு மேடை சொன்னார்கள். இந்த சட்டம் நிறைவேறும் போது திமுகவினர் டெல்லியில் எதிர்த்தனர். தற்போது 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றியது. எட்டு மணி நேர வேலையை பன்னண்டு மணி நேரமாக உயர்த்தியதை எதிர்க்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. 

கொடைக்கானலில் வாட்ஸ் ஆப் காலில் பெண்ணை மிரட்டி பணம் கேட்ட திமுக பிரமுகர் கைது

இந்த விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை எப்போது வேண்டுமானாலும் சட்டமாக மீண்டும் மாற்றலாம். 12 மணி நேர வேலை என்பது மிகவும் மோசமானது. மிகவும் ஆபத்தானது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மருத்துவராக நான் பேசுகிறேன். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை திமுக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும். 

மின்சார கட்டணத்தை பொறுத்தவரையில் தற்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டம் 42 சதவீதம் குறைக்கத்தான் முடியும். சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட வேண்டும் ஆனால் பதினைந்து நாட்கள் தான் தற்போது நடத்துகின்றனர். சபாநாயகர் நல்ல மனிதர் தான். யாரையும் பேச விட மாட்டார். கேள்வியும் அவரே எழுப்புகிறார், பதிலும் அவரே சொல்கிறார். எம் எல் ஏக்கள் கேள்வி கேட்டால் சபாநாயகர் பதிலளிக்கிறார். 

வேங்கைவயல் விவகாரம்; மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

சபாநாயகர் என்பவர் நடுநிலைமையான ஒருவராக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு 25 சதவீதம், எதிர்க்கட்சியினருக்கு 75 சதவீதமும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சர்வாதிகாரி போலவும், பள்ளியில் தலைமை ஆசிரியர் கையில் உள்ள குச்சியை வைத்துக்கொண்டு மிரட்டுவது போலவும் சபாநாயகரின் செயல்பாடு உள்ளது. தமிழக அரசே ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்தப்பட வேண்டும் எனவும் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios