Asianet News TamilAsianet News Tamil

Crime News: மதுரையில் மது போதையில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற 5 பேருக்கு வலை

மதுரை மாவட்டத்தில் மது போதையில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான 5 பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

young man killed by his friends for drug addiction in madurai
Author
First Published Apr 27, 2023, 7:53 PM IST | Last Updated Apr 27, 2023, 7:53 PM IST

மதுரை பாஸ்கரதாஸ் நகரைச் சேர்ந்தவர் சதக் அப்துல்லா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை மிரட்டி ஒரு ரௌடியை போல் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருட்டு, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்கும் சென்று வந்துள்ளார். ஆனால், தற்போது குற்றச்செயல்கள் எதிலும் ஈடுபடாமல் இருந்த சதக் அப்துல்லா மதுரை பேருந்து நிலையத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சதக் அப்துல்லா தனது நண்பர்கள் 5 பேருடன் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காலியிடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது சதக் அப்துல்லாவுக்கும், அவருடன் மது அருந்திக் கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சதக் அப்துல்லாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து நிலைக்குலைந்த சதக் அதே பகுதியில் கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த பெரிய கல்லை தூக்கி சதக்கின் தலையில் போட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

தமிழ்நாட்டிலேயெ மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் மைதானம் தான் - அன்புமணி பேச்சு

இதனைத் தொடர்ந்து இயற்கை உபாதையை கழிப்பதற்காக வந்த நபர் ஒருவர் சதக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக திடீர் நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios