பணியில் இல்லாத அரசு மருத்துவர்; அஜாக்கிரதையால் பறிபோன ஒன்றரை வயது குழந்தையின் உயிர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சளி தொல்லைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைக்கு செவிலியர் சிகிச்சை அளித்த நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 months old baby died while get a treatment in government hospital in tirupattur district vel

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியைச் சேர்ந்தவர் கனேஷ்குமார் (வயது 28). இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில காலமாக சளி பிரச்சினையால் குழந்தை அவதிப்பட்டு  வந்தது. இதன் காரணமாக நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவரான கிரிஜா என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நல்லிரவு  இரண்டு மணி அளவில் மீண்டும் குழந்தைக்கு இருமல் மற்றும் சளி தொல்லை அதிகமாக அதிகாலையில் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் 5 மணி அளவில் அனுமதித்துள்ளார். அதிகாலையில் பணி மருத்துவர் மது அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தால் அவருடைய ஆலோசனையின் படி செவிலியரான அனிதா ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை அளித்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

வயிற்று வலியால் துடித்த பெண்; கணவன் போன் எடுக்காததால் இளம் பெண் விபரீத முடிவு

பின்னர் குழந்தை வீட்டில் உறங்கிய நிலையில் காலை 10 மணியளவில் திரும்பவும் இருமல் பிரச்சினை வந்துள்ளது. அதன் பின்னர் குழந்தையை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் தினேஷ் குழந்தையை பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் நன்றாக இருந்த குழந்தை திடீரென இறந்ததற்கு முழு காரணம் பணியில் இல்லாத மருத்துவர் மற்றும் செவிலியரால் சிகிச்சை அளிக்கப்பட்டது தான் என கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறினர் அழுதனர்.

உயிர்பலி வாங்கிய ஷவர்மா; அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமைச்சர் - அதிகாரிகள் கலக்கம்

மேலும் பணியில் இல்லாத மருத்துவர் மது மற்றும் செவிலியர் அனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் பெற்றோரை சமாதானப்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒன்றரை வயது குழந்தையின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios