அனைத்து மதசடங்குகளுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் இன்று மட்டும் மெனம் காப்பது ஏன்? இந்து முன்னணி கேள்வி
அனைத்து மத பண்டிகைகளும் கொண்டாடும் திமுக அரசு விநாயகர் சதுர்த்தியை புறக்கணிப்பதாகவும் அவர்களுக்கு விநாயகர் தண்டனை கொடுப்பார் என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திருப்பூர் ராமமூர்த்தி நகரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விநாயகர் தரிசனம் செய்து அங்கு நடந்த கோலப்போட்டிகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விநாயகர் சதுர்த்தியானது நடக்கக் கூடிய அரசாங்கத்திற்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்.
மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். அவர்கள் கட்சி அலுவலகத்தில் ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழா நடக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து முன்னணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் ரோட்டுக்கு வந்து சுதந்திரத்துக்காக போராட வேண்டும் என்பதற்காக விநாயகர் சதுர்த்தியானது பால கங்காதர திலகரால் தொடங்கப்பட்டது.
வயிற்று வலியால் துடித்த பெண்; கணவன் போன் எடுக்காததால் இளம் பெண் விபரீத முடிவு
தமிழகத்தில் இந்து விழிப்புணர்வுக்காக ராமகோபாலன் அவர்களால் தொடங்கப்பட்டு இன்றைக்கு ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைகக்பட்டு உள்ளது. இந்த அரசாங்கம் விநாயகருக்கு இடைஞ்சல் செய்கிறது. விநாயகர் விஷயத்தில் இவர்கள் நடந்து கொள்வது விநாயகருக்கு அழிவை ஏற்படுத்தும் என்றார்.