தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர் தற்கொலை; ஊதியம் வழங்காததால் விபரீதம்
தூத்துக்குடிம் அனல் மின் நிலையத்தில் முறையாக ஊதியம் வழங்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ஒப்பந்த ஊழியர் பிரசாந்த் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தவர் பிரசாந்த். ஒப்பந்த நிறுவனம் இவருக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பிரசாந்த் அனல் மின் நிலைய கறி கையாளும் பகுதியில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அனல் மின் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அனல் மின் நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும். ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் இன்று விவிடி சிக்கனல் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்பாகம் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
குடிமகன்கள் கவனத்திற்கு: மது போதையில் தகராறு செய்த தந்தையை குத்தி கொன்ற மகன் கைது
இருப்பினும் சிஐடியு தொழிற்சங்கத்தினர், சி ஐ டி யு மாநில செயலாளர் ரசல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் 22 பேரை உடனடியாக கைது செய்தனர். அப்போது காவல்துறையினர் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் நடவடிக்கைக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு - பக்தர்கள் பரவசம்