குடிமகன்கள் கவனத்திற்கு: மது போதையில் தகராறு செய்த தந்தையை குத்தி கொன்ற மகன் கைது

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே மதுபோதையில் தகராறு செந்த தந்தையை மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

man killed by own son in ariyalur district

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள கருப்பிலாக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் அர்சுனன். இவருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இளைய மகன் அருண் திருப்பூரில் வேலை பார்த்த போது கடந்த ஆண்டு  காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

man killed by own son in ariyalur district

இது அர்ச்சுணனுக்கு தெரிய வர ஒரு அக்கா, அண்ணன் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் நீ திருணம் செய்துள்ளாய் என அடிக்கடி போதையில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று இரவும் அதே போல் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு - பக்தர்கள் பரவசம்

தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த தந்தை மீது ஆத்திரமடைந்த அருண் கத்தியை எடுத்து தனது தந்தை அர்ச்சுனனின் கழுத்து, தலை, மார்பு என கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அர்சுனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த கீழப்பழுவூர்  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். 

இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்; காவல்துறை அதிரடி

மேலும் கொலை செய்த அருணை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios