ஆளுநரின் அலட்சியத்தால் 2 நாட்களில் 2வது மரணம்! ஆன்லைன் ரம்மியால் பல லட்சத்தை இழந்த இன்ஜினியர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அடுத்த ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது 5வது மகன் பாலன் (30). இன்ஜினியரிங் முடித்த இவர் தூத்துக்குடியில் கப்பல் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அடுத்த ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது 5வது மகன் பாலன் (30). இன்ஜினியரிங் முடித்த இவர் தூத்துக்குடியில் கப்பல் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இதில், 3 லட்சம் ரூபாய் மேல் இழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோகும் உயிர்கள்! ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சத்தை இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை.!
இதனால், மனவேதனை அடைந்த பாலன் வீட்டில் தூக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் தோற்றதால் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சிவன்ராஜ் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று தூத்துக்குடி அருகே இன்ஜீனியர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டார். 2 நாளில் 2 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;-துணிவு பட கொண்டாட்டத்தில் இளைஞர் பலி! படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்துற வேலையை பாருங்க!DGP அட்வைஸ்
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் நிறைவேற்ற பிறகும் ஆளுநர் ஒப்புதல் தாராததால் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.