துணிவு பட கொண்டாட்டத்தில் இளைஞர் பலி! படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்துற வேலையை பாருங்க!DGP அட்வைஸ்
கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டர் முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற டேங்கர் லாரி மீது ஏறி நின்று அஜித் ரசிகர் பரத்குமார் (19) நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அவருக்கு முதுகு தண்டுவடம் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு இடையே நேற்று அஜித்தின் துணிவு படம் வெளியானது. அப்போது, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டர் முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற டேங்கர் லாரி மீது ஏறி நின்று அஜித் ரசிகர் பரத்குமார் (19) நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அவருக்கு முதுகு தண்டுவடம் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் உயிரிழப்பு - துணிவு பட கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்..!
இந்நிலையில், சினிமா படங்கள் வெளியாகும்போது பாதுகாப்பு இல்லாத செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுப்பட வேண்டாம். வாகனங்களில் ஏறுவது கட் அவுட்டுக்கள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயல்கள். இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும். இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் டேங்கர் லாரி, கட் அவுட்களில் ஏறி உயிரிழக்கும் பொழுது அந்த குடும்பமே சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதையும் படிங்க;- TASMAC : மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை! முழு விபரம் இதோ
இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். காவல்துறை இதுபோன்ற செயல்களை தடுத்துதான் வருகிறது. அதையும் மீறி செய்கிறார்கள். 5 காவலர்கள் இருக்கும் போது 5 ஆயிரம் பேர் வந்துவிட்டால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்கள் கண்ணுக்கே தெரிவது இல்லை என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.