தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.

தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் வரும் 29ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாகவே சில இடங்களில் லேசானது முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

இதையும் படிங்க;- மக்களே அலர்ட் !! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29 ஆம் தேதி தொடங்குகிறது.. வானிலை மையம் தகவல்

இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தூத்துக்கடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் விடவும் அனுமதி..