ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சத்திற்கும் மேல் கடன்; போண்டா மாஸ்டர் எடுத்த விபரீத முடிவு - திருவள்ளூரில் சோகம்

அரக்கோணம் பகுதியில் ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து பணத்தை இழந்து ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்கிய போண்டா கடைக்காரர் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

young man commits suicide for loss money of online rummy app in thiruvallur district vel

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகர் பால்வாடி தெருவைச் சேர்ந்தவர் ராமு (வயது 38).  திருமணமாகாத நிலையில் அரக்கோணம் பழனிபேட்டையில் போண்டா கடை நடத்தி வந்தார். இந்நிலையில் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.  இதனால் அவருக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய தனியார் வங்கிகள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூபாய் 10 லட்சம் அளவுக்கு கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. 

நெல்லையில் பீடி சுற்றும் கூலி தொழிலாளியின் மகன் UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை

இந்த தகவல் தெரிந்து அவரது உறவினர்கள் ராமுவிடம் இருந்த ஒரு செல்போனை வாங்கி கீழே போட்டு உடைத்துள்ளனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் உள்ள மோகத்தால் மீண்டும் ஒருவரிடம் பணத்தை கடன் வாங்கி புதிதாக ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கி ஆன்லைன் ரம்மி சூதாட்டம் ஆடி உள்ளார். இந்நிலையில் வங்கியில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப செலுத்துமாறு ராமுவிடம் கேட்டு வந்தனர்.  இதில் மன உளைச்சலுக்கு ஆளான ராமு  திருத்தணியில் வீட்டில் இருந்தவர்களிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். 

இரவில் கள்ளக்காதலனுடன் வீடியோ கால்; மனைவியின் கையை துண்டித்த கணவன் - வேலூரில் பரபரப்பு

அரக்கோணம் அருகே தணிகை போளூர் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் திருமணம் ஆகாத, போண்டா கடை நடத்தி வந்த வாலிபர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரக்கோணத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios