UPSC Exam: நெல்லையில் பீடி சுற்றும் கூலி தொழிலாளியின் மகன் UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை
திநெல்வேலி மாவட்டம் கல்லிடை குறிச்சியில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மேல் முகமறக்குடி தெருவில் வசிப்பவர் வேல்முருகன். இவர் அப்பகுதியில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பேச்சி (வயது 26). இவர் கடந்த வாரம் வெளியான யு பி எஸ் சி தேர்வில் 576வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவர் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும், தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியர் படிப்பு முடித்து யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைப்பதை நோக்கமாக கொண்டு படித்து வந்துள்ளார்.
கோவை மக்களவை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது; சர்கார் விஜய் பாணியில் நீதிமன்றத்தில் திடீர் வழக்கு
கடந்த நான்கு முறை தேர்வு எழுதி வெற்றி கிடைக்காத போதிலும், அவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தற்போது வேலை பார்த்து வருகிறார். பணியின் இடையே விடா முயற்சியாக கடந்தாண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தாயார் லட்சுமி பீடி சுற்றும் தொழிலாளியாகவும், சகோதரர் சென்னையில் தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார். தந்தை வேல்முருகன் டீக்கடை மட்டும் வைத்து குழந்தைகளின் படிப்புக்காக அதாவது மகன் கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவை நினைவாக்க சொந்த வீட்டையே விற்று படிக்க வைத்துள்ளார். தற்போது தேர்வில் மகன் வெற்றி பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், எனது கனவு நிறைவேறிவிட்டதாக கூறி ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.