Asianet News TamilAsianet News Tamil

'டேய் நான் விசிக தலைவர் டா' எண்டயே டிக்கெட் கேக்குறியா? அரசு பேருந்தில் ஆசாமி அலப்பறை

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை இளைஞரால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

young man who refused to take a ticket on a government bus and had an argument has gone viral vel
Author
First Published Aug 31, 2024, 2:12 PM IST | Last Updated Aug 31, 2024, 2:13 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பெங்களூரு செல்லும்(444) எண் அரசுப் பேருந்து வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மாதனூர் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு இளைஞர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் நடத்துனர்  அவர்களிடம் டிக்கெட் எடுக்க கேட்டபோது இளைஞர் ஓருவர் மது போதையில் இருந்ததால் ரகளையில் ஈடுபட்டுள்ளார். 

ஃபிளைட் இல்லனா என்ன! இந்தா வந்திருச்சுல வந்தேபாரத் ரயில் - 9 மணி நேரத்தில் சென்னை -நாகர்கோவில் பயனம்!

மேலும் நான் யார் தெரியுமா? விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர். என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா? மகளிருக்கு மட்டும் டிக்கெட் எடுக்கவில்லை நாங்களும் டிக்கெட் எடுக்க மாட்டோம். உன்னைப் போல் ஆயிரம் பேரை நான் பார்த்துள்ளேன். உன்னால் என்னை இறக்கி விட முடியுமா? எனக் கூறி போதை இளைஞர் பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு: தமிழர்களின் திறமையை உலகறிய செய்த முதல்வர்

இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் பயணித்த சக பயணிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் போதை இளைஞரை நடத்துநர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு பேருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் போதை இளைஞர் செய்த அலப்பறை தொடர்பான வீடீயோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios