Asianet News TamilAsianet News Tamil

ஃபிளைட் இல்லனா என்ன! இந்தா வந்திருச்சுல வந்தேபாரத் ரயில் - 9 மணி நேரத்தில் சென்னை -நாகர்கோவில் பயனம்!

பிரதமர் மோடி இன்று 3 புதிய வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைக்கிறார், இதில் சென்னை - நாகர்கோவில் வழித்தடமும் ஒன்று. 9 மணி நேரத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவிலை அடையலாம்.

TN got two more Vande Bharat trains. PM Modi launching today! dee
Author
First Published Aug 31, 2024, 10:55 AM IST | Last Updated Aug 31, 2024, 11:12 AM IST

3 புதிய வந்தேபாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மீரட்-லக்னோ, சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை -பெங்களூரு வந்தேபாரத் ரயில்கள் மூலம் தமிழ்நாடு, கர்நாடக மற்றும் உத்தரபிரதேச மாநில மக்கள் பயனடைய உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இருந்தபடியே பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் 3 புதிய வந்தேபாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயணத்தை வழங்கும். வேகம் மற்றும் நிம்மதியான பயனத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

சென்னை - நகர்கோவில் வந்தேபாரத் ரயில்

மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தேபாரத் ரயில் இன்றுமுதல் தொடங்க உள்ளது. இந்த ரயில் 724 கிலோமீட்டர் தொலைவை 9 மணி நேரத்தில் பயணிகிறது.

புதன் கிழமையைத் தவிர வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். பின்னர், நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு சென்னை- எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

16 பெட்டிகளைக் கொண்ட இந்த வந்தேபாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. ‘ஏசி’ சேர் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு 1,760 ரூபாயும், எக்ஸ்கியூடிவ் கோச்சில் ஒருவருக்கு 3,240 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை உணவுக்கான கட்டணும் சேர்த்தது.

சதாரண விரைவு ரயில்கள் சென்னை -நாகர்கோவில் இடையே சுமார் 12 மணிநேர பயணம் எடுத்துக்கொள்கிறது ஆனால். இந்த வந்தேபாரத் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு 9 மணிநேரத்தில் நாகர்கோவிலை அடைகிறது. இதன் மூலம் பயனர்களுக்கு 3 மணிநேரம் மிச்சமாகிறது.

ரயில் நிறுத்தம் நேரம்!

சென்னையிலிருந்து புறப்படும் போது

சென்னை எழும்பூர் : 5.00 am
தாம்பரம் : 5.23 am
திருச்சி : 8.55 am
திண்டுக்கல் : 9.53 am
மதுரை : 10.38 am
கோவில்பட்டி : 11.35 am
திருநெல்வேலி : 12.30 pm
நாகர்கோவில் : 1.50 pm

நாகர்கோவிலில் இருந்து புறப்படும் போது

நாகர்கோவில் : 2.20 pm
திருநெல்வேலி : 3.18 pm
கோவில்பட்டி: 3.58 pm
மதுரை : 5.03 pm
திண்டுக்கல் : 5.48 pm
திருச்சி : 6.45 pm
விழுப்புரம் : 8.53 pm
தாம்பரம் : 10.28 pm
சென்னை எழும்பூர் : 11.00pm

தொடக்க விழாவுக்காக இன்று மட்டும் சென்னை -நாகர்கோவில் வந்தேபாரத் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையலத்திருந்து 12.30 மணிக்கு புறப்படுகிறது. இதன் வழக்கமான சேவை வரும் செப்2ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திலிருந்து தொடங்கும்.

மதுரை - பெங்களூரு வந்தேபாரத் ரயில்

இதேபோல், மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையும் இன்று முதல் தொடங்கப்படுகிறது. மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் நிலையத்திற்கு சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.30 மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் ரயில் இரவு 9:45 மணிக்கு மதுரை ரயில்நிலையத்திற்கு வந்தடையும்.

8 பெட்டிகளைக் கொண்ட இந்த வந்தேபாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ‘ஏசி’ சேர் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு 1,575 ரூபாயும், எக்ஸ்சிகியூடிவ் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு 2,865 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வந்தேபாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று டெல்லியிலிருந்தே காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios