Chennai Rain Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை வடகிழக்குப்பருவமழை தொடங்கும் என்றும், தொடக்கத்திலேயே அதிகப்படியான மழைபொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
Chennai rain
இந்நிலையில் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் 4 நாட்கள் வீடுகளில் இருந்தே வேலை.! முதலமைச்சர் அதிரடி உத்தரவு
mk stalin
மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆசட்யர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருத்தி 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கொட்டப் போகுது மழை; நீங்கள் வீட்டில் செய்ய வேண்டியது இதுதான்; மறக்க வேண்டாம்
Mk Stalin
கனமழை முன்னெச்சரிக்கையாக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதன்படி விவசாயிகள், மீனவர்கள், 4 சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
Mk Stalin
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையினபடி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.